ETV Bharat / state

மருதமலை முருகன் கோயில் தைப்பூசத் தேர்த்திருவிழா - கோவை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!

Marudhamalai Thaipoosam: மருதமலை முருகன் கோயில் தைப்பூசத் தேர் திருவிழா மற்றும் கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, அதிகாரிகளுடம் கோவை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 11:30 AM IST

Etv Bharat
Etv Bharat

கோவை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் 'தைப்பூச தேர்த்திருவிழா' மற்றும் கோனியம்மன் கோயில் 'திருத்தேர் பெருந்திருவிழா'-வை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், பொள்ளாச்சி சார் ஆட்சியர், மாநகராட்சி துணை ஆணையாளர் மாநகர காவல் துணை ஆணையர், மருதமலை கோயில் துணை ஆணையர், கோனியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர், 'மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்த்திருவிழா 28.01.2024 வரையிலும், அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் திருத்தேர் பெருந்திருவிழா 28.02.2024 அன்றும் நடைபெறவுள்ளது.

திருவிழா நாட்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன், தேவையான போக்குவரத்து நெறிமுறைகளைக் கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். போதிய அளவிலான காவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மாநகராட்சியின் மூலம் திருவிழாவின்போது மொபைல் டாய்லெட் வசதிகளும், குடிநீர் விநியோகம் தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், தேவையான இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்தும், குப்பைகளை அகற்றி பிளிச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளித்து உடனுக்குடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு வாகனத்தினை நிறுத்தி வைப்பதுடன், தேவையான பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

தேர்த்திருவிழா துவங்கும் முன், திருத்தேரின் சக்கரங்கள் மற்றும் தேர்வடம் ஆகியவற்றின் உறுதித் தன்மையை பரிசோதித்து, தேர் இயங்குவதற்கேற்ற நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பக்தர்களுக்கு வனவிலங்குகளால் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி வழிபாடு செய்ய போதிய பாதுகாப்பு வழங்கவும், சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றவும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவிழா நாட்களில் மின்சாரம் தடையின்றி கிடைக்கவும், தாழ்வான நிலையில் உள்ள மின்கம்பிகளை சரி செய்யவும், தேர் செல்லும் பாதைகளில் மின் இணைப்புகளை சரிவர கண்காணிக்கவும், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதோடு, 'பொது சுகாதாரத்துறை மூலம் திருவிழா நடைபெறும் நாட்களில், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதுடன், முதலுதவி மேற்கொள்ளும் பொருட்டு, மருத்துவர்களைக் கொண்டு அவசர மருத்துவ முகாம் அமைத்து தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும், தேர் செல்லும் பாதைகளில் மேடு பள்ளங்கள் ஏதேனும் இருப்பின், அதனை சீர்ப்படுத்தி சாலையை செப்பனிடுதல் வேண்டும்.

தேரோடும் நாளான 28.02.2024 அன்று நகரப் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்களின் வருகையை தேர் செல்லும் பாதைகளிலிருந்து மாற்றுப்பாதையில் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை திருக்கோயில் நிர்வாகம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு, திருவிழா சிறப்பாக நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: “நானும் உதயநிதியும் ஒரே வீட்டில் பொண்ணு எடுத்திருக்கோம்” சிங்கப்பூர் சலூன் பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி கலகல!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.