கோயம்புத்தூர்: கோவை மாவட்ட நிர்வாகமும், கொடிசியா அமைப்பும் இணைந்து நடத்தும் 8வது புத்தகத் திருவிழா 2024 கொடிசியா வளாகத்தில் கடந்த 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கோவை புத்தகத் திருவிழா நேற்று இரவு 8 மணியுடன் நிறைவு பெற்றது.
இந்த புத்தகத் திருவிழாவில், கிட்டத்தட்ட 285 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பதிப்பாளர்கள், அவர்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி இருந்தனர். அதுமட்டுமின்றி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக களைகட்டி வந்த புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
இதில், சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காட்சிக்கு வருகை புரிந்துள்ளதாக கொடிசியா அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 67 ஆயிரத்து 500 பேர் புத்தகத் திருவிழாவிற்கு வருகை புரிந்த நிலையில், இந்த ஆண்டு 7 ஆயிரத்து 500 பேர் கூடுதலாக வருகை புரிந்துள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு 224 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், 71 அரசுப் பள்ளி மாணவர்களும், 17 ஆயிரம் பள்ளியைச் சாராத மாணவர்களும், 62 கல்லூரி மாணவர்களும், கல்லூரியைச் சாராத 5 ஆயிரம் மாணவர்களும் வருகை புரிந்துள்ளனர். இந்தாண்டில் சுமார் ரூ.3 கோடி அளவிற்குப் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும், பெரும்பாலும் குழந்தைகளுக்கான புத்தகங்களும், நாவல் புத்தகங்களும் அதிகமாக விற்பனையாகி உள்ளதாக கொடிசியா அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோவை புத்தகத் திருவிழா 2024; எப்போது? என்னென்ன புத்தகங்கள் கிடைக்கும்? முழு விவரம்!