ETV Bharat / state

"மதவாதக் கட்சி பாஜகவுக்கு நோ.. குடும்பக் கட்சியான திமுகவுக்கும் நோ" - கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேச்சு! - LOK SABHA ELECTION 2024

AIADMK Election Campaign in Coimbatore: மதவாதக் கட்சியான பாஜகவும் வேண்டாம், குடும்ப கட்சியான திமுகவும் வேண்டாம் என கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பிரச்சாரத்தில் பேசினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 4:32 PM IST

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூர் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், சாய்பாபா காலனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கிருந்த இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் பேசிய அவர், "இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் எனக்கு மக்களாகிய உங்களை நம்பித்தான் வாய்ப்பு அளித்துள்ளனர். திமுக இவர்களின் பாதுகாவலர், அவர்களின் பாதுகாவலர் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால், அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

அதிமுக மக்களுக்கான இயக்கம். கரானா காலத்தில் எந்தவித கட்சி பேதமும் பாராமல், அனைவருக்கும் உதவிய இயக்கம் அதிமுக தான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழியில் சாதி, மத பேதமின்றி எல்லோரும் எல்லாம் பெற வேண்டும், இல்லாமை என்கின்ற நிலை வேண்டும் என்று உழைக்கின்ற இயக்கம் அதிமுக.

மேலும், நோன்பு கஞ்சிக்கு வழங்கப்படக்கூடிய அரிசியைக் கொடுத்து உதவியது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். அதனை மேலும் உயர்த்தி வழங்கியது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். சிறு வயதிலிருந்தே அனைவரும் மனித நேயத்துடன் தான் பழகி வருகிறோம்.

ரம்ஜானுக்கு இஸ்லாமியர்கள் பிரியாணி கொடுப்பார்கள், கிறிஸ்துமசுக்கு கிறிஸ்தவர்கள் கேக் கொடுப்பார்கள், தீபாவளிக்கு இந்துக்கள் இனிப்புகள் கொடுப்பார்கள், தமிழர் திருநாளான பொங்கலை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம். அப்படிப்பட்ட நாடு தமிழ்நாடு. அப்படிப்பட்ட ஊர் கோயம்புத்தூர்.

மத நல்லிணக்கம் உடைய சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மண் தமிழக மண். அதில் சில பெருச்சாளிகள் உள்ளே புகுந்து தில்லுமுல்லு வேலைகள் செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் சம்மட்டி அடி வாங்குவது உறுதி .

மேலும், பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதும் அதிமுக தான். இது திமுகவால் வழங்க முடியாது. எனவே, மதவாதக் கட்சியான பாஜகவும் வேண்டாம், குடும்ப கட்சியான திமுகவும் வேண்டாம். மக்களுக்கான இயக்கமான அதிமுக வேட்பாளரான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற வேட்பாளர், ஐயப்பன் முன்பு கீழே விழுந்து வணங்கி தரிசனம் செய்தார். பின்னர் விளக்கேற்றி வழிபட்ட அவர், கோயில் பசுக்களுக்கு வாழைப்பழங்களை வழங்கினார்.

அதன்பின், கோயிலில் நடைபெறும் ஆராட்டு விழாவிற்காக அழைத்து வரப்பட்டிருந்த மணிசேரி ராஜேந்திரன் என்ற யானையைத் தடவிக் கொடுத்து வணங்கினார். இந்த நிகழ்வுகளில் கோயம்புத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ரம்ஜான் பண்டிகை எதிரொலி : ரூ.11 ஆயிரம் கோடிக்கு பணப் பரிவர்த்தனை - ஜம்மு காஷ்மீர் வங்கி சாதனை! - Jammu Kashmir Bank

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.