சென்னை: 2024-25ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. அப்போது, மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலுரை அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறையில் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 190 அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் காவல்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அளித்த பதிலுரை
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 29, 2024
1/3 pic.twitter.com/WumzKiWQht
புகார்களை விரைந்து விசாரிக்கவும், நீதிமன்ற வழக்குகளை விரைந்து நடத்தவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டங்கள் தொடர்பான வழக்குகளை திரும்ப பெறுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குனருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தையும் அமைதியாக நடத்தி காட்டியுள்ளோம்.
வரும் காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை இருக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன். சிறு குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளை திருத்தி அவர்களை மாற்றுவதற்கு பறவைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெற்றி என்னால் மட்டும் உருவானது அல்ல, என்னுடைய அனைத்து அமைச்சரவை சகாக்களால் உருவானது.
தொழில் வளர்ச்சி முதல் கல்வி வளர்ச்சி என்று அனைத்திலும் தமிழ்நாடு உயர்ந்து வருகிறது. அனைத்து அமைச்சரவை சகாக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குற்றங்களின் எண்ணிக்கை குறைப்பது அல்ல, குற்ற எண்ணத்தை குறைப்பது தான் காவல்துறையின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அந்த பதிலை கேட்பதற்கான எதிர்க்கட்சி தயாராக இல்லை. ஆக்கப்பூர்வமான விவாதங்களை பேசுவதற்கு நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம்.
எங்களது இலக்கு மிகப்பெரியது, எங்களது கொள்கை மிகப்பெரியது, எனவே எங்களின் பயணமும் மிக நீண்டது. எங்களது இலக்கில் நாங்கள் வெல்வோம், வென்று கொண்ட இருப்போம். புகார்களை விரைந்து முடிக்கவும், நீதிமன்ற குற்றங்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் அரசு செயல்படுகிறது. வருங்காலங்களில் குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.