ETV Bharat / state

மூன்று மாதத்தில் பெயர்ந்து விழுந்த அரசுப் பள்ளி சீலிங்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மாணவர்கள்! - classroom ceiling collapsed

Classroom ceiling collapsed: காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டு 3 மாதங்களே ஆன ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் வகுப்பறை சீலிங் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இறை வணக்கத்தில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

பெயர்ந்து விழுந்த அரசு பள்ளி சீலிங்
பெயர்ந்து விழுந்த அரசு பள்ளி சீலிங் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 9:10 PM IST

சென்னை: காஞ்சிபுரம் அருகே சுமார் 62 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு மூன்றே மாதங்கள் ஆன ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சீலிங் உடைந்து விழுந்ததால், கட்டிடத்தின் உறுதித் தன்மையை மாவட்ட ஆட்சியர் உடனே ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.61 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் மூன்று புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில், புதிய கட்டடத்தின் வகுப்பறையில் மேலே உள்ள சீலிங் நேற்று முன்தினம் திடீரென உடைந்து கீழே விழுந்தது. மேலும், ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் இறக்கை வளைந்துள்ளது. வகுப்பறையின் சீலிங் இடிந்து விழுவதற்கு முன்னதாக, மாணவ மாணவிகள் இறைவணக்கம் செலுத்துவதற்காக மைதானத்தில் இருந்துள்ளனர். இதனால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த வகுப்பறையின் புதிய கட்டிடத்தை ஆய்வு செய்து பள்ளி மாணவ, மாணவிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக கட்டடம் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, தரமற்ற முறையில் இந்த கட்டடம் கட்டப்பட்டிருந்தால் இடித்துவிட்டு தரமான முறையில் மீண்டும் புதிய கட்டடத்தை கட்டித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: "ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்களை நேசித்தவர் ஆம்ஸ்ட்ராங்" - திருமாவளவன் புகழாரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.