ETV Bharat / state

'மழையால் அல்லல் வேண்டாம்'.. ஏர்போர்ட்டுக்குள் செல்லும் மாநகர பேருந்துகள்.. சென்னை பயணிகள் நிம்மதி! - CITY BUSES IN AIRPORT

மழைக்கு மத்தியில் விமான பயணிகளின் அல்லலை போக்க சென்னை விமான நிலையத்தில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகர பேருந்து
சென்னை மாநகர பேருந்து (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 12:26 PM IST

சென்னை: கனமழை பெய்யும் என அறிவிப்பையடுத்து சென்னை விமான நிலையத்தில், விமான பயணிகளுக்கு வாடகை கார்கள் கிடைப்பது கடினமாக இருக்கும் சூழலில், அரசு பேருந்துகள் விமான நிலையத்தினுள் சென்று பயணிகளை ஏற்றி வருகின்றன.

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கன மழை எச்சரிக்கை காரணமாக இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் தங்களுடைய இருப்பிடங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அப்படியே வாடகை கார்கள் கிடைத்தாலும், மழையை காரணம் காட்டி அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து மக்கள் வசதிற்காக தமிழக அரசு விமான நிலையத்திற்கு உள்ளேயே அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில், மாநகர பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்குள் உள்நாட்டு விமான நிலைய வருகை பகுதி, சர்வதேச விமான நிலைய வருகை பகுதி ஆகிய இடங்களுக்குள் வந்து, விமான பயணிகளை ஏற்றி செல்கின்றன.

இதையும் படிங்க: பள்ளிகளை ஆய்வு செய்யாத 145 வட்டாரக் கல்வி அலுவலர்கள்.. ஆக்ஷனில் இறங்கிய தொடக்கக் கல்வித் துறை!

குறிப்பாக கிளாம்பாக்கம், கோயம்பேடு, சென்னை பாரிமுனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் மாநகர பேருந்துகள் அவ்வப்போது சென்னை விமான நிலையத்திற்குள் வந்து, பயணிகளை ஏற்றி செல்கின்றன.

வழக்கமாக சென்னை விமான நிலையத்திற்கு வெளிப்பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் சாதாரண மாநகர பேருந்துகளை, விமான நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநகர பேருந்துகள் மழை பெய்து முடியும் வரை விமான நிலையத்திற்குள் வந்து செல்லவுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.