ETV Bharat / state

"சென்னையின் மையப்பகுதியில் 99 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு" - சிவ்தாஸ் மீனா தகவல்! - SHIVDAS MEENA INSPECTED THE DRAINAGE WORKS - SHIVDAS MEENA INSPECTED THE DRAINAGE WORKS

Chennai Drainage works: சென்னையின் மையப்பகுதியில் 99 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்
வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 7:47 PM IST

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, ராஜா அண்ணாமலை சாலை, லஸ் சர்ச் சாலை, அயனாவரம், ஓட்டேரி, வில்லிவாக்கம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எப்போதும் மழைக்காக நாம் தயாராக இருக்க வேண்டும். பருவ காலத்தில் பெய்யும் மழைக்காக மட்டுமல்லாமல், திடீர் மழை காரணமாக 6 முதல் 7 சென்டிமீட்டர் வரை மழை பெய்தால் தண்ணீர் தேங்குவதை பார்த்துள்ளோம். இதுபோன்ற நிலை இருக்கக்கூடாது. இதற்கு மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும்.

சென்னையில் சுமார் 5,500 முதல் 5,600 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால்கள் உள்ளன. இவற்றை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். இதில் 1,300 கி.மீ தூரம் நல்ல நிலையில் உள்ளது. சுத்தம் செய்ய வேண்டியதில்லை. மீதமுள்ள 4,300 கி.மீ தூரத்தில் 3,200 கி.மீ, கடந்த வெறும் ஒன்றரை மாதங்களில் தூய்மைப்படுத்தியுள்ளோம். ஜூலை இறுதிக்குள் முழுவதும் தூய்மை செய்து இப்பணிகள் நிறைவடையும்.

இதைத் தவிர, கோடை காலங்களில் மழை பெய்யும் போது சேரும் கழிவுகளை அவ்வப்போது தூய்மை செய்யும் பணிகளும் நடக்கின்றன. சென்னையில் 90,000 சிறிய மழைநீர் வடிகால் குழிகள் உள்ளன. இதில் 37,000 குழிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 53,000 குழிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெரியார் சாலை அருகே ரயில்வே லைனுக்கு கீழே மழைநீர் வடிகால் அமைக்க வேண்டியுள்ளதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரச்னை இருந்தது. இப்போது தான் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணி நிறைவடைந்தால் இந்த சாலையில் பிரச்னை இருக்காது. மெட்ரோ ரயில் பணிகளின் போது மழைநீர் வடிகால் குழாய்கள் உடைந்தால் மெட்ரோ நிர்வாகம் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

லஸ் சர்ச் பக்கத்தில் உடைந்த குழாய்களை மெட்ரோ சரி செய்து வருகிறது. இதேபோல் மெட்ரோ, ரயில்வே, நெடுஞ்சாலை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு சிரமம் கூடாது என்பது தான் இந்த ஆய்வின் நோக்கம். 24 மணி நேரத்தில் 15-20 செமீ மழை பெய்தால் எந்த பிரச்னையும் இருக்காது.

அதுவே எதிர்பாரத மழை பெய்தால், எடுத்துக்காட்டாக 50 - 60 செ.மீ மழை தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்தால் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க இயலாது. சென்னையின் மையப்பகுதியில் 99 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன”. இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: “நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்” - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! - ANBIL MAHESH POYYAMOZHI

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.