ETV Bharat / state

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! - CM on Ayothidasar Birth anniversary - CM ON AYOTHIDASAR BIRTH ANNIVERSARY

Ayothidasar Birth anniversary: அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்த நாளையொட்டி, திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவப் பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியோற்போம்' என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து, அரசு உயர் அதிகாரிகள் மணிமண்டபத்தில் மரியாதை
பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து, அரசு உயர் அதிகாரிகள் மணிமண்டபத்தில் மரியாதை (PHOTO CREDITS ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 4:35 PM IST

சென்னை: 'தமிழ் தேசியத் தந்தை'யாக கருதப்படும் அயோத்திதாசப் பண்டிதரின் 179 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்தும் திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

கெளரவிக்கும் தமிழக அரசு: சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் கடந்த ஆண்டு தான் பண்டிதர் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் சமூக வலைத்தளம் மூலமாக அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 'தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழக அரசின் சார்பாக செய்தி - மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன் மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாசரின் திருவுருவ சிலைக்கும், திருவுவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

தமிழகத்தில் சாதி, மத வேறுபாடுகளை அகற்ற போராடிய அயோத்திதாசர், 'தமிழன்' என்ற இதழை தொடங்கினார். தமிழகத்தில் திராவிட மகாஜன சபையை நிறுவி நடத்திய சிறப்பும் அவருக்கு உண்டு.

இதையும் படிங்க:இது தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு செய்யும் துரோகம் - அன்புமணி ராமதாஸ் சாடல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.