ETV Bharat / state

கோவை மாவட்டத்திற்கு 13 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - mk stalin coimbatore visit

mk stalin coimbatore visit: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்துர் மாவட்டத்திற்கு 13 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 1:38 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழக அரசு சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களிலும் ரூ.1,274 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளையும், 57,325 பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் விழா மேடையில் பேசிய முதலமைச்சர் 4 மாவட்டங்களுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மட்டும் 13 புதிய திட்டங்களை அறிவித்தார்.

அதன் விவரம் பின்வருமாறு:

  • தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும் தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதற்காக ரூ.14.04 கோடி நிதி
  • ரூ.2.80 கோடி நிதி ஒதுக்கீட்டில் 3 இலட்சம் தென்னங்கன்றுகள் உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்
  • 157 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 'மின்னணு தேசிய வேளான் சந்தை' மூலம் வெளி மாநில வணிகர்களுடன் தொடர்புபடுத்தி வெளிப்படைத் தன்மையுடன் விற்பனை, தென்னை விவசாயிகள் உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
  • தேங்காய்கள் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு சில்லறை விற்பனை மூலம் விற்பனை செய்யப்படும்.
  • 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விலாமரத்தூர் சாலை முதல் அத்திக்கடவு அணை வரை 8.29 கி.மீ சாலை அமைக்கப்படும்.
  • வார்டு எண் 11 முங்கில்மடை குட்டை பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் 57 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் மற்றும் வடிகால் அமைக்கப்படும்.
  • மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையார் பகுதியில் தரைமட்ட குடிநீர்த் தொட்டி அமைத்துத் தரப்படும்
  • காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும்.
  • இக்கரைபூலுவம்பட்டி, சோமையம்பாளையம், திவான்சாபுதூர், மாவுத்தம்பதி ஆகிய ஊராட்சிகளில் 4 பாலங்கள் கட்டப்படும்.
  • 15 அங்கன்வாடி மையங்கள், 18 நியாய விலை கடைகள், 14 சமுதாய நலக்கூடங்கள், 7 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்.
  • கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் வடிகால் மற்றும் கான்க்ரீட் சாலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுவரும் மேம்பாலத்தால் அகற்றப்பட்ட பேருந்து நிலையம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் சீரமைக்கப்படும்.
  • ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹாக்கி விளையாட்டு தரை அமைக்கப்படும்.

இதையும் படிங்க: பேருந்து மீது லாரி உரசி விபத்து; உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.