ETV Bharat / state

சென்னை: இளைஞர் மீது ஏறி இறங்கிய கார்.. தப்பியோடிய இரு பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு! - CHENNAI CAR ACCIDENT - CHENNAI CAR ACCIDENT

Chennai Accident: சென்னையில் சாலை ஓரம் மது போதையில் படுத்துறங்கிய இளைஞர் மீது கார் ஏறி இறங்கியதில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காரை இயக்கிய பெண்
காரை இயக்கிய பெண் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 4:15 PM IST

சென்னை: சென்னை பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (22), இவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று பெசன்ட் நகர் கலாக்ஷேத்ரா காலனி வரதராஜ் சாலை நடைபாதை அருகே மது போதையில் படுத்து உறங்கியுள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்ற கார் சாலை ஓரம் மது போதையில் கிடந்த சூர்யாவின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த சூர்யாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூர்யா சில மணி நேரத்திற்குள்ளாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய காரில் இரு பெண்கள் இருந்துள்ளனர். அதில் காரை இயக்கிய பெண் சம்பவ இடத்திலிருந்து காருடன் தப்பி ஓடியுள்ளார்.

உடன் அமர்ந்திருந்த பெண் விபத்து குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும் காரில் வந்த இரு பெண்களும் மது போதையில் இருந்ததாக உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்த சூர்யாவின் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பெசன்ட் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தப்பி ஓடியவர்களை பிடித்து சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகளில் கார் பதிவெண் மற்றும் தப்பியோடிய பெண்களின் புகைப்படம் ஆகிய ஆதாரங்கள் இருந்தும் தப்பி ஓடிய பெண்களை ஏன் கைது செய்யவில்லை? என கூறி உயிரிழந்த சூர்யாவின் உறவினர்கள் பெசன்ட் நகர் காவல் நிலையத்தை நேற்று நள்ளிரவு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தனியார் வசம் செல்லும் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆட்கள் தேர்வு.. நெல்லை போக்குவரத்து கழக முடிவால் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.