சென்னை: சென்னையில் பருவ மழை பெய்யும் போதெல்லாம் வேளச்சேரியில் உள்ள டான்சி நகர், சீதாராம் நகர், ராம் நகர், விஜயநகர், வி.ஜி.பி, செல்வா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகும் சூழல் உள்ளது. இதன் காரணமாக மழை வெள்ளத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி ரப்பர் படகு மற்றும் லைப் ஜாக்கெட்களை தாங்களாகவே வாங்கியுள்ளனர்.
இது குறித்து டான்சி நகர் குடியிருப்பு நலச்சங்கம் செயலாளர் பாலகிருஷ்ணாவை ஈடிவி பாரத் செய்தியாளர் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசுகையில் அவர் கூறியதாவது, “மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்கின்றனர். அப்போது அரசு செய்யும் மீட்புப் பணிகள் சில நேரங்களில் அனைவருக்கும் சென்றடைவதில்லை.
அரசும் உதவிகளை அனைவருக்கும் செய்யமுடிவதில்லை. எனவே டான்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு மக்களாகிய நாங்களே எங்களை காப்பாற்றிக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மீட்புப் பணிக்கு ஏற்ற வகையில் படகுகள் வாங்கியுள்ளோம்.
இதையும் படிங்க: தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த இளைஞர்! தொழிற்சாலையினர் பேச்சுவார்த்தை!
“மழை குறித்து எங்கள் அசோசியேஷன் சார்பில் கூட்டம் போடப்பட்டது. அதில் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, அதற்காக பணம் தயார் செய்து இந்த பொருட்களை வாங்கியுள்ளோம். இந்த ரப்பர் படகில் 8 பெரியவர்கள் அல்லது 10 சிறியவர்கள் வரை ஒரே நேரத்தில் அழைத்து செல்லலாம்” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், கடந்த ஆண்டில் மக்களை மீட்கும் போது பல பிரச்சனைகள் வந்ததாகவும் இந்த வருடம் அது போன்ற பிரச்சனையை வராமல் இருக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் எங்கள் பகுதி மக்களுக்கு பால், தண்ணீர் ஆகியவை தினமும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அரசை எதிர்ப்பாக்காமல் எங்கள் நாங்களே பாதுகாக்க இது போன்று நடவடிக்கையை எடுத்து உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்