ETV Bharat / state

சென்னை- சிங்கப்பூருக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் இருந்து இன்று மதியம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் தொடர்பான கோப்புப்படம்
விமானம் தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2024, 10:54 PM IST

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று பகல் 12 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 49 பயணிகள் 8 விமான ஊழியர்கள் உட்பட, 57 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில், சென்னையில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்திற்கு ஒரு ட்விட்டரில் ஒரு குறுந்தகவல் வந்தது.

அதில் சென்னையில் இருந்து இன்று மதியம் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானத்தின் கழிவறைகளில், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடுத்து பரபரப்படைந்த ஏர் இந்தியா அதிகாரிகள், உடனடியாக சிங்கப்பூர் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சிங்கப்பூர் விமான நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து சென்ற அந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று மாலை 4:40 மணிக்கு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

இதையும் படிங்க: சென்னை டூ ஜெர்மன் பயணத்தில் விமானத்துக்குள் ஒழுகிய தண்ணீர்.. நனைந்த பயணிக்கு 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு!

இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து அவசரமாக கீழே இறக்கப்பட்டதோடு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், விமானத்துக்குள் ஏறி பரிசோதித்தனர். ஆனால் விமானத்தில் எந்தவிதமான குண்டுகளும் இல்லை என்பது தெரிய வந்தது. எனவே இது வழக்கம்போல், விஷமிகள் கிளப்பி விடும் புரளி என்று தெரிய வந்துள்ளது.

இதற்கு இடையே சென்னை விமான நிலைய போலீசார், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு அந்த ட்விட்டர் பதிவுகளை ஆய்வு செய்ய போலீசார் முயன்றனர். அப்போது பதிவை போட்ட நபரே அதனை டெலிட் செய்திருந்ததும் தெரிய வந்தது.

இதை அடுத்து இந்த ட்விட்டர் போட்டது யார்? எந்த இடத்திலிருந்து வந்தது? என்பதைக் கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நவீன கருவிகளை உபயோகித்து, டெலிட் செய்யப்பட்ட டிவிட்டர் பதிவை மீண்டும் புதுப்பித்து, இந்த வதந்தியைக் கிளப்பிய நபரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.