ETV Bharat / state

கொலைவெறி தாக்குதல்: 3 பேருக்கு கடுங்காவல் தண்டனை விதித்த சென்னை அமர்வு நீதிமன்றம் - Chennai sessions court

Chennai sessions court: மெக்கானிக் கடையின் வாகனங்களை வீட்டை மறித்து நிறுத்துவதை தட்டிக்கேட்டவரை தாக்கிய மூவருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Chennai sessions court
சென்னை அமர்வு நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 7:01 AM IST

சென்னை: சென்னை அண்ணாநகரில் மெக்கானிக் கடை வைத்திருக்கும் கார்த்திக் என்பவர் தனது வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதால் வீட்டிற்குள் செல்வதில் சிரமம் இருப்பதாக சிவக்குமார் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் கார்த்திக், தன் நண்பர்கள் பிரகாஷ், ஹரி ஆகியோருடன் சேர்ந்து சிவக்குமாரின் இடது தோல்பட்டையில் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர்.

2020 மார்ச்சில் நடந்த இந்த சம்பவம் குறித்து டி.பி.சத்திரம் காவல் நிலையத்தினர் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி D.V.ஆனந்த் முன்பு நேற்று (பிப்.27) நடந்தது. காவல்துறை தரப்பில் மாநகர கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் டி.சுரேஷ் ஆஜராகினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, மூவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கில் நாளை தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.