ETV Bharat / state

செந்தில் பாலாஜி மனுக்கள் மீது ஜூன் 14-ல் தீர்ப்பு.. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு! - SENTHIL BALAJI Cases

SENTHIL BALAJI CASE UPDATE: சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது ஜூன் 14ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

senthil balaji file image
senthil balaji file image (Credit -ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 4:45 PM IST

சென்னை: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்திருந்தது. இந்த நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், நீதிமன்ற உத்தரவுப்படி அசல் செலான்களை ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டுமென கோரியுள்ளார். மேலும், கடந்த 2012 முதல் 2022 வரை சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் காலத்தில், சிட்டி யூனியன் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கிகளில் பணிபுரிந்த ஊழியர்களின் விவரங்களை வழங்க வேண்டும். 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் டெபாசிட் செய்தவர்களின் பான் கார்டு விவரங்களையும் தெரிவிக்க வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ம.கெளதமன் ஆஜராகி, அமலாக்கத்துறையால் தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் ஒரு சில ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமலாத்துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் சூழல் உள்ள நிலையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 91-ன் படி ஆவணங்களை வழங்கக் கோரி மனுக்களை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய மனைவி மேகலா வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யபட்ட தொகையை முழுவதுமாக செலவு செய்துள்ளதாகவும், தற்போது தனக்கு தெரியாது என கூறுவது ஏற்புடையதல்ல எனவும் வாதிட்டார்.

மேலும், மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் மனுக்களைத் தாக்கல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜி மனுக்கள் மீது ஜூன் 14ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: “பெரியார் பல்கலை துணை வேந்தர் முடிவுகள் எடுப்பதை தடுக்க வேண்டும்..” ஆட்சிக் குழுவிடம் வேண்டுகோள்! - Salem Periyar university

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.