ETV Bharat / state

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - TN Rain

Tn Weather Update: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால், தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை கோப்புப்படம்
மழை கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 3:05 PM IST

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

மாவட்டம் மழை அளவு (சென்டிமீட்டரில்)
அரக்கோணம் (ராணிப்பேட்டை) 11சென்டிமீட்டர்
கொட்டாரம் (கன்னியாகுமரி), திருவாலங்காடு (திருவள்ளூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 10 சென்டிமீட்டர்
மடத்துக்குளம் (திருப்பூர்), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), தொண்டி (ராமநாதபுரம்9 சென்டிமீட்டர்
வெம்பாக்கம் (திருவண்ணாமலை), மொடக்குறிச்சி (ஈரோடு), கடலூர் (கடலூர்), நாகர்கோயில் (கன்னியாகுமரி)8 சென்டிமீட்டர்
மைலாடி (கன்னியாகுமரி), வனமாதேவி (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), கோவிலங்குளம் (விருதுநகர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), நாமக்கல் (நாமக்கல்), திருவாடானை (ராமநாதபுரம்), பேரையூர் (மதுரை), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), குளச்சல் (கன்னியாகுமரி), சேந்தமங்கலம் (நாமக்கல்) 7சென்டிமீட்டர்
உதகமண்டலம் (நீலகிரி), வைகை அணை (தேனி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), மானாமதுரை (சிவகங்கை), இரணியல் (கன்னியாகுமரி), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர் 6 சென்டிமீட்டர்

அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட சற்று குறைவாகவும், இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 37.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33 டிகிரி முதல் 35 டிகிரிசெல்சியஸ், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 31 டிகிரி முதல் 33 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 20 டிகிரி முதல் 27 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 35.3 டிகிரி செல்சியஸ் (-2.7 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.0 டிகிரி செல்சியஸ் (-2.5 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 9 முதல் 13 வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையில், பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. நாளை முதல் ஜூன் 11 வரையில், அதற்கடுத்த நான்கு தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க: தமிழகத்தில் கனமழை தொடருமா? - வெதர் ரிப்போர்ட் சொல்வது என்ன? - Tn Weather Update

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.