ETV Bharat / state

ஒக்கியம் மடுவு பாலம் நீர்வழிப்பாதை; சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்! - Okkiyam Maduvu Bridge - OKKIYAM MADUVU BRIDGE

Chennai Metro Rail: ஒக்கியம் மடுவு பாலத்தின் நீர்வழிப்பாதையை 200 மீட்டர் நீளத்திற்கும், கூடுதலாக 1.5 மீட்டர் உயர இடைவெளியுடனும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பருவமழைக்கு முன் இந்தப் பணிகள் முடிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 10:42 PM IST

சென்னை: ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை பணிகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் 2023-ல் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் ஒரு முக்கியமான பிரச்னை. அதிக மழைப்பொழிவை தாங்கும் திறன் இல்லாத நிலையில் உள்ள ஒக்கியம் மடுவு பாலத்தில் நீர்வழிப்பாதை தற்போது சுமார் 80 மீட்டர் நீளம் உள்ளது. ஆனால், அதன் உயரம் குறைவாகவே உள்ளது.

இதனை சரி செய்யும் பொருட்டு, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வழிப்பாதையை 200 மீட்டர் நீளத்திற்கும், கூடுதலாக 1.5 மீட்டர் உயர இடைவெளியுடனும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. நீர்வளத்துறையின் வேண்டுகோளின்படி, இந்த பணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க அகலமான நீர்வழிப்பாதையுடன் புதிய பாலம் கட்டிய பின்னர், தற்போதுள்ள பாலத்தை இடித்து அகற்றும் பணியும் நடைபெறும். இந்தப் பணிகள் ஒக்கியம் மடுவுக்கு குறுக்கே நீர்வழிப்பாதையை 200 மீட்டராக அகலப்படுத்தும். இதனால் அடுத்த பருவமழையில் அதிகரிக்கப்பட்ட நீர்வழிப்பாதை கொண்ட பாலம் தயாராகும்.

வரும் பருவமழைக்கு பின்னர், அடுத்த பருவமழைக்கு முன் இந்தப் பணியை முடித்து, ஒக்கியம் மடுவு பாலம் எதிர்கால கனமழையைச் சிறப்பாக தாங்கும் திறன் கொண்டதாக கட்டமைக்கப்படும். தற்போதுள்ள பணிகள் எதிர்வரும் பருவமழைக்கு முன்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தற்போதுள்ள நீர்வழிப்பாதை மடுவின் அடித்தள நிலை வரை சரிசெய்யப்படும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதலும் முடிவுமாக உள்ள இந்திய மூவர்ணக்கொடி.. சென்னை கோட்டை தாங்கியிருக்கும் வரலாற்றுச்சுவடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.