ETV Bharat / state

மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னை! மழை வருமா, வராதா? - TN WEATHER UPDATE - TN WEATHER UPDATE

TN WEATHER UPDATE: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னையில் வானம்மேகமூட்டமாகவும், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யும் என வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை தொடர்பான கோப்புப் படம்
மழை தொடர்பான கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 3:48 PM IST

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னையில் மேகமூட்டமாகவும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 7, தேவாலா (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 3, கூடலூர் பஜார் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்) தலா 1.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்): அதிகபட்ச வெப்பநிலையாக நாகப்பட்டினம் 38.3 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோடு 18.6 டிகிரி செல்சியஸ்.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

ஆகஸ்ட் 26 மற்றும் ஆகஸ்ட் 27: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 28 முதல் செப்டமர் 1 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளான மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 30 வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிககளான வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 26 சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகஸ்ட் 27 மற்றும்ஆகஸ்ட் 28 தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 26 மற்றும் ஆகஸ்ட் 27 மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கர்நாடகா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மைக்ரேன் தலைவலி பிரச்சனையா உங்களுக்கு? இதை சாப்பிட்டால் சரியாகுமாம்..மருத்துவர் கூறும் அட்வைஸ் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.