சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கன மழை முதல் மிக கன மழையும், சில இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இரண்டு தினங்களுக்கு கனமழை முதல் மிக கன மழையும், சில இடங்களில் அதிக கன மழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது என்றும் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றார்.
இதையும் படிங்க: 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை.. என்னென்ன இயங்கும், இயங்காது?
இன்று தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது என தெரிவித்த அவர் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் எனக்கூறினார்.
மேலும், அடுத்தா 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழையும், ராணிப்பேட்டை, வேலூர், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.
அக்டோபர் 1 முதல் தற்போது வரை வடகிழக்கு பருவமழை 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பான அளவு 7 சென்டிமீட்டர் மழை ஆகும். ஆனால், தற்போது இயல்பை விட 84% அதிகமாக பதிவாகியுள்ளது என்றார். மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அடுத்தா 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இன்று இரவு மழை அளவு அதிகரிக்கும் என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்