சென்னை: கோடை காலம் துவங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி எடுக்கத் துவங்கிவிட்டது எனலாம். இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து மக்களை வெப்பத்தின் உஷ்ணத்தில் இருந்து பாதுகாத்து வருகிறது என்றே சொல்லலாம்.
அதாவது, குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி மற்றும் தென்னிந்தியப் பகுதியின் மேல் உள்ள வளிமண்டல கீழடிக்குப் பகுதிகளில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆரஞ்சு அலர்ட்: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஒரு இடங்களில் பலத்த காற்றுடன் (40 முதல் 50 கி.மீ வேகத்தில்) லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 15 முதல் 19 வரை அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலையாக தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பு நிலை இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும்.
அடுத்த 3 மணி நேரம்: செய்யூர், பொன்னேரி, திருக்கழுகுன்றம், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. மேலும், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தென்மாவட்ட மக்களுக்கு இனி சம்மரே கிடையாதா..? வானிலை மையம் முக்கிய தகவல்!