ETV Bharat / state

வானிலை நிலவரம்: தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - TAMIL NADU WEATHER REPORT - TAMIL NADU WEATHER REPORT

Chennai Meteorological Centre: தமிழகத்தில் ஏப்.12 முதல் ஏப்.15 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்பின், ஏப்.16 முதல் ஏப்.18 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Chennai Meteorological Centre
Chennai Meteorological Centre
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 3:55 PM IST

சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழைப் பதிவாகியது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: குன்னூர் PTO (நீலகிரி) 12 செ.மீ, குன்னூர் (நீலகிரி) 9 செ.மீ, சேர்வலாறு அணை (திருநெல்வேலி) 8 செ.மீ, மாஞ்சோலை (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி) தலா 7 செ.மீ, நாலுமுக்கு (திருநெல்வேலி) 6 செ.மீ, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 5செ.மீ , அழகரை எஸ்டேட் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) தலா 4 செ.மீ , பர்லியார் (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), குந்தா பாலம் (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) தலா 3 செ.மீ, கருப்பாநதி அணை (தென்காசி), அடவிநயினார் அணை (தென்காசி), தென்காசி AWS (தென்காசி) தலா 2 செ.மீ, தென்காசி, மணிமுத்தாறு (திருநெல்வேலி), ஆய்க்குடி (தென்காசி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), கெத்தை (நீலகிரி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), வலங்கைமான் (திருவாரூர்), பாம்பன் (ராமநாதபுரம்), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), மண்டபம் (ராமநாதபுரம்) தலா 1 செ.மீ.

அதிகபட்ச வெப்பநிலை : தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோரப் பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை திருப்பத்தூரில் 41.6 டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரோட்டில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளில் 33 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 21 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 36.0 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.9 டிகிரிசெல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
1. தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
2. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ஏப்.12: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்.13: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்.14 மற்றும் ஏப்.15: தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்.16 முதல் ஏப்.18 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

ஏப்.12 முதல் ஏப்.16 வரை: அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.

ஏப்.12 மற்றும் ஏப்.13: அடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2 டிகிரி – 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

ஏப்.14 முதல் ஏப்.16 வரை: மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34 டிகிரி –38 டிகிரி வரை செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:

ஏப்.12 முதல் ஏப்.16 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஏப்.12 மற்றும் ஏப்.13: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

இதையும் படிங்க: கோவையில் விதியை மீறிய தேர்தல் பிரச்சாரம்.. பாஜக அண்ணாமலை மீது வழக்குப் பதிவு - முழு பின்னணி என்ன? - Annamalai

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.