ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை தானாம்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - TN WEATHER REPORT

தமிழ்நாட்டில் அடுத்த ஏழு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை தொடர்பான கோப்புப்படம்
மழை தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 3:30 PM IST

சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வடகிழக்கு பருவமழை தென்தமிழகத்தில் தீவிரமடைந்ததுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ) : கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்) 9 செ.மீ, நத்தம் AWS (திண்டுக்கல்) தலா 7 செ.மீ, உதகமண்டலம் AWS (நீலகிரி) தலா 6 செ.மீ, கீரனூர் (புதுக்கோட்டை) தலா 5 செ.மீ, உப்பாறு அணை (திருப்பூர்) தலா 4 செ.மீ, வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி) தலா 3 செ.மீ, கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 2 செ.மீ, சேரன்மகாதேவி (திருநெல்வேலி) தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்) : அதிகபட்ச வெப்பநிலை : சென்னை நுங்கம்பாக்கம் 34.6 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை: ஈரோடு : 16.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை :

அக் 23 - 29 : தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : மாஞ்சோலை விவகாரம்; காப்புக்காடாக அறிவித்ததை ரத்து செய்யக்கோரி மனு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு : அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

தமிழக கடலோரப்பகுதிகள் : 23.10.2024 முதல் 29.10.2024 வரை: ஏதுமில்லை

வங்கக்கடல் பகுதிகள்:

அக் 23 - 25 வரை :

மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் : சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், 23-ஆம் தேதி மாலை முதல் 24 - ஆம் தேதி காலை வரை மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள் : அக் 23 - 27 வரை : ஏதுமில்லை

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.