ETV Bharat / state

"குடை எடுத்துட்டு போக மறக்காதீங்க".. அடுத்த ஒரு வாரத்துக்கு மழை தானாம்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - tn weather report

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மழை தொடர்பான கோப்புப்படம்
மழை தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 4:12 PM IST

சென்னை : தமிழகத்தில் பொதுவாக ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ) : மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை) தலா 13 செ.மீ, மண்டலம் 08 மலர் காலனி (சென்னை) 12 செ.மீ, திருவாலங்காடு (திருவள்ளூர்) 11 செ.மீ, அம்பத்தூர் (சென்னை) 10 செ.மீ, வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 9 செ.மீ, சென்னை (N) AWS (சென்னை) 8 செ.மீ, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 7 செ.மீ, திருத்தணி (திருவள்ளூர்) 6 செ.மீ, வாலாஜா (ராணிப்பேட்டை) 5 செ.மீ, சாய்ராம் கல்லூரி ARG (செங்கல்பட்டு) 4 செ.மீ, திருத்தணி PTO (திருவள்ளூர்) 3 செ.மீ, BASL முகையூர் (விழுப்புரம்) 2 செ.மீ, திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி) 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்): அதிகபட்ச வெப்பநிலை :- மதுரை விமான நிலையம்: 41.6 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை :- ஈரோடு: 19.6 டிகிரி செல்சியஸ்

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை :

வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு (26.09.2024 மற்றும் 27.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி - 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

இதையும் படிங்க : "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்" - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு : அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி -26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி - 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி -28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

தமிழக கடலோரப்பகுதிகள்:

செப் 26 : மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
செப் 27, 28 : மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
செப் 29, 30 : எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள் :

செப் 26 : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

செப் 27 : மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

செப் 28 - 30 : எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள் :

செப் 26 - 30 : தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.