ETV Bharat / state

அடுத்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு! - Today Tamil Nadu Weather Report

Tamil Nadu weather report: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை அடுத்த 5 தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

chennai-regional-meteorological-centre-statement-tn-24-march-to-28-march-temperature-rise-gradually-2-to-3-degree-celsius
வெயிலில் சுற்றுபவரா நீங்கள்? இதை கவனிங்க... தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் நிலை இது தான்! தமிழக வானிலை நிலவரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 4:52 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை அடுத்த 5 தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி உள்ளது. குறிப்பாக, சேலத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் மழை எங்கும் பெய்யவில்லை. அதிகபட்சமாக, சேலத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நீலகிரி மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக, கரூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் இயல்பை விட அதிகமாக பதிவாகி உள்ளது. நாமக்கல்லில் குறைந்தபட்சமாக 17 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

மார்ச் 24ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, ஓரிரு இடங்களில் அதிக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ஜோதிமணி போட்டி.. கரூர் களம் எப்படி இருக்கிறது? - Karur Lok Sabha Constituency

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.