ETV Bharat / state

தக்காளி, வெங்காயம் விலை சரிவு... ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? - KOYAMBEDU MARKET VEGETABLE RATE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 5:04 PM IST

KOYAMBEDU MARKET VEGETABLE PRICE:கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட தக்காளி, வெங்காயம் விலை வெளிமாநில வரத்தால் சற்று குறைய தொடங்கியுள்ளது இதனால் தற்போதைய நிலவரப்படி தக்காளி 1 கிலோ 40 ரூபாய்க்கும், வெங்காயம் 1 கிலோ 30 முதல் 40 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி, வெங்காயம் கோப்புப்படம்
தக்காளி, வெங்காயம் கோப்புப்படம் (CREDITS- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. இதில் தக்காளி வெங்காயம் என்பது தமிழ்நாட்டின் மாவட்டங்களில் இருந்து 5 விழுக்காடு மட்டும் தான் வருகிறது, மீதம் 95 விழுக்காடு வெளி மாநிலங்களில் இருந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக வெளி மாநிலங்களின் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் சில நாட்களாக மிக அதிகமாக காணப்பட்ட தக்காளி வெங்காயம் விலை இந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்துள்ளது. தக்காளி 1 கிலோ 40 ரூபாய், வெங்காயம் 1 கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் காய்கறிகளை பொறுத்தவரை வடமாநிலங்களில் சற்று மழை பெய்ய தொடங்கியதால் காய்கறி வரத்து அதிகரிக்க தொடங்கிய நிலையில் விலையும் சற்று குறையத் தொடங்கியுள்ளது. காய்கறிகளின் விலை நிலவரம் மற்றும் வரத்து குறித்து, கோயம்பேடு காய்கனி மலர் வியாபார சங்க பொருளாளர் சுகுமாறன் கூறுகையில், “கடந்த 10 நாட்களாக தக்காளி, வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது, இதனால் தக்காளி விலை 1 கிலோ 40 ரூபாய்க்கும், வெங்காயம் 1 கிலோ 40 முதல் 30 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்துவரும் காய்கறி லாரியின் எண்ணிக்கை 600 முதல் 700 இருக்க வேண்டிய நிலையில் 510 முதல் 520 வாகனங்கள்தான் வருகின்றனர் இருந்தாலும் கடந்த மாதத்தைவிட வரத்து அதிகரித்துள்ளதால், விலை சற்று குறைய தொடங்கி உள்ளது.

காய்கறிகளான பச்சை பட்டாணி மற்றும் அவரைக்காய் சீசன் இல்லாத காரணத்தினால் விலை சற்று அதிகரித்துள்ளது. பச்சை பட்டாணி 1 கிலோ 200 ரூபாய்க்கும், அவரை 1 கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கும் விற்படுகிறது. பீன்ஸ் 1 கிலோ 150 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட நிலையில் தற்போது 70 முதல் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மேலும் வெண்டைக்காய், சௌசௌ, முள்ளங்கி, பாவக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளின் விலை சற்று குறைந்து 1 கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக முருங்கைக்காய் 60 முதல் 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 1 கிலோ 40 ரூபாய்க்கும், விற்க்கப்பட்ட நிலையில் தற்போது 1 கிலோ 30 ரூபாய்க்கு குறைந்துள்ளது. அதேபோல் தற்போது கேரட் 40 முதல் 50 ரூபாய்க்கும், நூக்கல் 60 ரூபாய்க்கும், சௌசௌ 60 ரூபாய்க்கும், பீட்ரூட் 50 முதல் 60 ரூபாய்க்கும், விற்கப்படுகிறது. வரும் 10 நாட்கள் முகூர்த்த நாட்களாக இருப்பதால் இதே விலை தொடர வாய்ப்புள்ளது. அதற்கு பிறகு காய்கறி விலை குறைய வாய்ப்பு உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம் விடுத்த வார்னிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.