ETV Bharat / state

தோழி கண்முன்னே பறிபோன உயிர்.. தலை நசுங்கியதால் புகைப்படத்துடன் இறுதிச்சடங்கு! - CHENNAI IT WOMEN ACCIDENT

சென்னை ஆலந்தூர் அருகே சுரங்கப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஐடி ஊழியர் பள்ளத்தில் சிக்கி சாலையில் விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி டயரில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த பெண்
விபத்தில் உயிரிழந்த பெண் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 2:59 PM IST

சென்னை: ஐடி பெண் ஊழியர் ஒருவர் சாலையில் உள்ள பள்ளத்தினால் ஏற்பட்ட விபத்தில் தலை சிதறி உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பொழுது தலை இல்லாததால் தலைப்பகுதியில் வெள்ளை பூசணிக்காயில் அவருடைய புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் அரசி பெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் நித்யா (26). இவரது தோழி ஹரிணி (26). இவர்கள் இருவரும் சென்னை சோழிங்கநல்லூரில் தங்கி தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக நித்யா மற்றும் ஹரிணி இருவரும் பல்லாவரத்தில் உள்ள அவரது தோழியை சந்திக்க இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இருவரும் தலைகவசம் அணிந்துள்ளனர்.

இதையடுத்து இருவரும் தோழியை சந்தித்துவிட்டு இரவு வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது ,சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த மினி லாரி சாலையில் விழுந்த இருவரில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த நித்தியாவின் தலை மீது ஏறி இறங்கியுள்ளது.

இதில், நித்யா தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வாகனத்தை ஓட்டி வந்த ஹரிணி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் உயிரிழந்த நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: பெண் கழுத்தறுத்து கொலை.. நகைகளுடன் தப்பிய மர்ம நபர்கள்.. திருவாரூரில் நடந்த கொடூரம்..!

மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், ராணிப்பேட்டையை சேர்ந்த மோகன் குமார் என்பவரை கைது செய்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து பிறகு நித்யாவின் உடல் சொந்த ஊரான அரிசி பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய தயார் செய்தனர்.

தலை சிதைந்து அவர் உயிரிழந்த காரணத்தினால், அவரது தலைக்கு பதில் அந்த இடத்தில் வெள்ளை பூசணிக்காயை வைத்து அதன் மேல் அவரது புகைப்படத்தை வைத்து கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தி, கண்ணீர் மல்க கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர். இந்த காட்சிகள் பார்ப்போரின் மனதை பதைபதைத்தது. இச்சம்பவம் அப்பகுதியினரை பெறும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் ஐடி ஊழியர் சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தால், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னயில் தொடர்ந்து மோசமற்ற சாலைகளால் உயிர் விபத்து அதிகரித்து வருவதால் உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.