ETV Bharat / state

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களுக்கு வேலை இழப்பா? சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திரன் விளக்கம்! - deep fake

IIT Madras: செயற்கை நுண்ணறிவு பல்வேறு வேலைகளை எளிமைப்படுத்தி வரும் நிலையில் மனித சமூகத்திற்கு இதனால் தீங்கு வந்துவிடுமோ? போன்ற கேள்விகள் சமீபகாலமாக எழுந்த வண்ணம் உள்ள நிலையில் சென்னை ஐஐடி பேராசிரியர் இதற்கு விளக்கமளித்துள்ளார்.

சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திரன் விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 9:23 PM IST

சென்னை: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை ஐஐடி சென்டர் ஃபார் ரெஸ்பான்ஸ்பல் ஏஐ (CeRAI) என்கிற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஏஐ குறித்துப் பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில் சென்னை ஐஐடியின் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் நிறுவனத் தலைவர் ரவீந்திரன் ஈடிவி பாரத் ஊடகத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து அவர் கூறுகையில், “கடந்த ஆண்டிலிருந்து செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தில் ஜெனரேட்டிவ் ஏஐ என்ற புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது. அதன் மூலமாக மனிதர்களால் மட்டுமே செய்ய முடியும் என நினைத்துக் கொண்டிருந்தவற்றை தற்பொழுது ஏஐ நன்றாகச் செய்கிறது.

ஏஐ இல்லாமல் எதுவும் இயங்காத ஏற்படும்: கம்ப்யூட்டர் மனிதர்கள் எழுதுவதை விட நன்றாக இலக்கணப் பிழையில்லாமல் எழுதுகிறது. கல்லூரிகளில் ஒரு கருத்தைத் தோராயமாக எழுதி அதனை ஏஐ மூலமாக நன்றாக எழுதக் கூறும் நிலைமையை அடைந்துள்ளோம். பல தொழில்களில் வரைதல், எழுத்து மூலமாகக் கூறுவதையும் ஏஐ பயன்படுத்தி நன்றாகச் செய்ய முடியும். கம்ப்யூட்டர் இல்லாமல் தற்பொழுது ஒரு தொழிலைச் செய்ய முடியாது என்ற நிலை உள்ளது போல், ஏஐ இல்லாமலும் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்து விடுவோம்.

எல்லா வேலையிலும் ஏஐ பயன்படுத்துவோம் என்ற தாக்கமும் ஏற்படும். ஏற்கனவே பல விஷயங்களில் அதன் தாக்கம் இருக்கிறது. சுகி, சுமோடா போன்றவற்றில் உணவுப் பொருட்களை ஆர்டர் கொடுக்கும் போது, ஏஐ பயன்படுத்தித் தான் எவ்வளவு நேரத்தில் வரும் என்பதைக் கூறுகின்றனர். வாழ்க்கையில் உள்ள அனைத்திலும் ஏஐ பயன்பாடு வந்துவிட்டது. அடுத்த 3 ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ், பி.காம், எம்.காம் எல்லாப் படிப்பிலும் ஏஐ தாக்கத்தினால் கல்லூரிகளில் சொல்லித் தரும் நிலை வந்து விடும்.

மனிதர்கள் அளவிற்கு ஏஐ வளர்ச்சி அடையவில்லையா?: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து 1930ஆவது ஆண்டு முதலே ஆராய்ச்சி செய்யத் துவங்கி உள்ளனர். 1950 ஆண்டு முதல் ஏஐ இருந்து கொண்டு இருக்கிறது. இந்த ஏஐ 15 ஆண்டிற்கு முன்னர் வரை மக்களுக்குப் பயன்படும் வகையிலோ, பாதிக்கும் வகையிலோ இல்லை. மிகக்குறைந்த அளவில் தான் இதன் பயன்பாடு இருந்தது. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஏஐ வாசிங் மெஷின் இருந்தது. தற்பொழுது ஏஐ பிரம்மாண்டமாகத் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் மனிதர்கள் அளவிற்கு ஏஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடையவில்லை.

உலகில் இதன் புரிதல் என்பது 6 வயதுக் குழந்தையின் திறன் அளவிற்குத் தான் உள்ளது.ஏஐ உலகத்தை ஆழமாகப் புரிந்து கொள்ள முடியாது. அதே சமயத்தில் சில விஷயங்களைச் சிறப்பான முறையில் செய்யும் . இதனால் ஏஐ மனிதர்கள் அளவிற்கு வந்து விட்டது என்பது கிடையாது.தற்பொழுது செய்வதைச் சிறப்பான முறையில் செய்து கொண்டு இருக்கிறது.ஏற்கனவே டெக்ஸ்ட் டூ ஸ்பீச் , ஸ்பீச் டூ டெக்ஸ்ட் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் ஏஐ ஒரே நேரத்தில் பல மொழிகளில் செய்யும் திறன் பெற்றது.

முன்னதாக கம்ப்யூட்டர் மூலம் 80 சதவீதம் செய்யப்பட்டது. அடுத்ததாக தற்பொழுது ஏஐ 100 சதவீதம் செய்யும் என நினைத்துக் கொண்டுள்ளோம். இந்திய மொழிகளில் 100 சதவீதம் மாற்றும் அளவிற்கு வரவில்லை ஆனால் அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் வந்துவிடும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினால் வேலைகளை எவ்வாறு செய்கிறோம் என்பதில் நிச்சயமாக மாற்றம் வரும்.

வேலை இழப்புகளுக்கு வாய்ப்பா?: ஏஐ உங்களின் வேலையை எடுத்துக் கொள்ளாது. ஏஐ தெரிந்த ஒருவர் உங்களின் வேலையை எடுத்துக் கொள்வார்.அது தான் உண்மை. முன்பு சுருக்கெழுத்து, தட்டச்சு தெரியுமா எனக் கேட்டது போல், கம்ப்யூட்டர் தெரியுமா எனக் கேட்கின்றனர். ஒரு மணி நேரத்தில் செய்யக்கூடிய வேலையை 10 நிமிடங்களில் செய்யும் ஒரு கருவிதான். தற்பொழுது உள்ள தொழில்நுட்பத்தில் வேலை போகாது. சில வேலைக்கள் போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எந்த தொழில்நுட்பம் வந்தாலும் மாற்றங்கள் இருக்கும்.

டீப் பேக் என்பது ஏஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்கனவே உள்ள மனிதர்கள் செய்யாத விஷயங்களைக் காண்பிப்பதைக் கூறுகிறோம். ஏஐ வருவதற்கு முன்பே செய்துக் கொண்டுதான் இருந்து உள்ளோம். ஒருவர் மாதிரி மிமிக்கிரி செய்வது, வேடம் போட்டுக் கொண்டு கேமராவில் வருவது போன்றவற்றைச் செய்து வந்துள்ளோம். ஏஐ வந்த பின்னர், மிமிக்ரி செய்யவும், வேடம் போடவும் ஆள் தேவையில்லை. ஒரு சாப்ட்வேர் இருந்தால் போதும்.

அதன் மூலம் பொய் இமேஜ் கொண்டு வந்து விடலாம். டீப் பேக் வந்ததால் ஏமாற்றுகின்றனர் எனக் கூற முடியாது. சமூக வலைத்தளங்கள் வந்த பின்னர் புரளி பரவுவது மிகவும் வேகமாக நடக்கிறது. முன்பு ஒரு குறிப்பிட்ட பகுதியில் பரவியது, தற்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் பொய்யான தகவல்களும் எளிதில் பரவி வருகிறது. டீப் பேக் படங்களை நன்றாக உற்றுப் பார்த்தால், பல கோடி செலவழித்து உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைத் தவிர, மற்றவற்றில், சிறிய சிறிய மாற்றங்கள் தெரியும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் தவறுகளை எளிதில் காணலாம்: டீப் பேக் தொழில்நுட்பம் பயன்படுத்தும் போது விரல்கள் சரியாக வராது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் படங்களை நாம் முழுமையாகக் கவனிக்காமல்,நம்புவோம். நன்றாகக் கவனித்தால் டீப் பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்களைக் கண்டுபிடிக்க முடியும். தொழில்நுட்பம் வளர வளர இது போன்றவற்றைக் கண்டுபிடிப்பதும் மிகவும் கடினமாக மாறும். உண்மையா, பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க வல்லுநர்கள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

எதிர்பார்க்காத ஒன்றை வீடியோவாக அனுப்பினால் சற்று யோசித்து அதன் பின்னர் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பின்னர் நம்புங்கள். இன்டர்நெட்டில் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள். வாட்ஸ் அப் போன்றவற்றில் வரும் தகவல்களை உடனே நம்பாமல் இருப்பது போல், இன்டர்நெட்டில் வரும் தகவல்களையும் யோசனை செய்து ஆய்வு செய்த பின்னர் நம்ப வேண்டும். ஏ ஐ என்பது கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் அது ஒரு விலங்கோ அல்லது மனிதரோ கிடையாது அதில் சரியாக கம்ப்யூட்டர் கோடு எழுத விட்டால் தவறுகள் வர வாய்ப்புள்ளது.

அமெரிக்காவில் முகத்தின் அடையாளத்தைப் பயன்படுத்துவதில் ஆட்களைக் கண்டறிவதிலும், சிலருக்குச் சரியாகக் காண்பிப்பதாகவும் சிலருக்குச் சரியாகக் காண்பிக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் இது போன்ற தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை. தொழில்நுட்பத்தில் சில விஷயங்களைச் சட்டத்தின் மூலமாகக் கட்டுப்படுத்த முடியும் சிலவற்றை விதிமுறைகளினால் கட்டுப்படுத்தலாம்.

அரசாங்கம் சட்டமாக இயற்றியோ அல்லது நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து சில வழிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம். மக்களுக்கு அதிக அளவில் பாதிப்பு இருக்கக்கூடிய இடத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை சில நாடுகள் இயற்றியுள்ளன. இந்தியாவும் அவற்றை இயற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது விரைவில் சட்டமாகவோ அல்லது வழிமுறைகளோ வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் வழக்கு: தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து ஏஐ தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது. டீப் பேக் தொழில்நுட்பத்தில் தவறாகப் பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே சட்டத்தில் வழிவகை உள்ளது. அதே நேரத்தில் தவறாகப் பயன்படுத்தும் போது அதற்கான விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டி உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் நாம் கெடுதலாகப் பயன்படுத்த நினைக்காவிட்டாலும் கெடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

அது போன்ற நேரத்தில் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். அதற்குப் பொறுப்பு யார் என்பது குறித்தும் முடிவு செய்யப் புதிதாகச் சட்டம் கொண்டு வர வேண்டியது உள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அதற்குத் தண்டனை கொடுக்க வழிமுறைகள் உள்ளது. பொதுமக்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயம் வீடியோவாக வந்தால், அது சரியாக உள்ளதாக என்பதைப் பார்க்க வேண்டும், உடனடியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. வீடியோவின் தரத்தைச் சற்று பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

தேர்தல் நேரத்தில் வரும் வீடியோக்களை தன்னார்வலர்கள் மற்றும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் அவற்றை ஆராய்ந்து உடனுக்குடன் பொய்யானது என்பதைத் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தன்னார்வலர்கள் தங்களால் முடிந்தவரை சமூக வலைத்தளங்களில் வரும் வீடியோக்களை அனுப்பினால் அதனைச் சரி பார்த்து அளிப்போம் எனக் கூறலாம். பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வரும் தகவல்களை யோசனை செய்து அடுத்தவருக்கு அனுப்ப வேண்டும்.

சென்னை ஐஐடியில் சென்டர் ஃபார் ரெஸ்பான்ஸ்பல் ஏஐ ஆரம்பித்துச் செயல்படுத்தி வருகிறோம் அதன் மூலமாக இந்த தொழில்நுட்பம் குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதி பொதுமக்களுக்கும் வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம். மேலும் அதில் தொழில்நுட்ப ரீதியாக இல்லாமல் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் வீடியோவாகவும் விரைவில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம், இதனால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் . வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை நாம் பயன்படுவதால், வரும் காலத்தில் பிற நாடுகளிலிருந்து தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிலைமை ஏற்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் பத்திர திட்டம் என்றால் என்ன? எதற்காக எதிர்ப்பு? - முழு விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.