சென்னை : சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி பூங்காவில் 'குவாண்டம் மிஷன்' குறித்த சர்வதேச அளவிலான கருத்தரங்கம் இன்று (ஆக 26) நடைபெற்றது. தேசிய குவாண்டம் மிஷன் தலைவர் அஜய் சௌத்திரி, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் காமகோடி, "சென்னை ஐஐடியில் முதல்முறையாக குவாண்டம் கம்ப்யூட்டர் குறித்து சர்வதேச கருத்தரங்கு நடத்தப்படுகிறது. கடந்த 1992ம் ஆண்டு அமெரிக்காவில் முதல்முறையாக நடத்தப்பட்டது. தற்போது கம்ப்யூட்டரில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. அதில் ஒன்று குவாண்டம் கம்ப்யூட்டர்.
அடுத்த தலைமுறை கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சிதான் குவாண்டம் கம்ப்யூட்டிங் முயற்சி ஆகும். சர்வதேச அளவில் குவாண்டம் கம்ப்யூட்டிங் தயாரிக்கும் முயற்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. நாம் தற்போது பயன்படுத்தும் கிளாசிக் வகை கம்ப்யூட்டர்கள் 0.1 என்ற பைனரி எண்களை கட்டளையாக கொண்டு செயல்படுகிறது.
நாம் தற்போது பயன்படுத்தும் கிளாசிக் வகை கம்ப்யூட்டர்களை விட வேகமாக செயல்படும் ஆற்றல் கொண்டதாக குவாண்டம் கம்ப்யூட்டிங் இருக்கும். 0 என்பது கரண்ட் போலவும், 1 என்பது கரண்டு இல்லாமல் இருப்பது போன்றுது. குவாண்டம் கம்ப்யூட்டர் என்பது 0 விற்கும் 1க்கும் இடைப்பட்டது.
0.1 பைனரி எண்களுக்கு இடைப்பட்ட கட்டளைகளை குவாண்டம் கம்யூட்டிங்கால் ஏற்க முடியும். குவாண்டம் கம்ப்யூட்டர் என்பது நாம் செஸ் விளையாடும் போது கம்ப்யூட்டர் அளிக்கும் நகர்வுக்கு இடையே 8 நகர்வுகளில் பல ஆயிரம் இருக்கும்.
செஸ் வேகமாக விளையாடுவதற்கு குவாண்டம் கம்ப்யூட்டரால் முடியும். விரைவாக தீர்வுகளை பெறுவதற்கு கிளாசிக்கல் அல்லது நர்மல் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நேரத்தை விட இது குறைவாக பயன்படுத்துகிறது.
தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இன்டெலிஜென்ஸ் குவாண்டம் கம்ப்யூட்டரை மையமாக வைத்து எதிர்காலத்தில் செயல்பட போகிறது. குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்ப வளர்ச்சி ஓரளவிற்கு பயன்பாட்டிற்கு வர இன்னும் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம். குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்திற்கான ஹார்டுவேர் பொருள்கள் தயாரிப்பது மிகவும் சவாலாக உள்ளது.
குவாண்டம் கம்ப்யூட்டிங் ஹார்டுவேர் பொருள்களில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் டைமண்ட் மூலமாக செய்யப்பட்டு, சோதனை சென்னை ஐஐடியில் மேற்கொள்ளபட்டு வருகிறது. துல்லியமான தகவல்களை வழங்குவதற்கு, குவாண்டம் சென்ஸ் (Quantum Sense) எனும் டெக்னாலஜியைப் பயன்படுத்துவது குறித்தும் தற்போது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிளாசிக் கம்ப்யூட்டர்கள் மூலமாக வங்கி பணப் பரிவர்த்தனைகளில் பாதுகாப்பு அம்சத்தை ஏற்படுத்துகிறோம். ஆனால் மற்றொரு கிளாசிக் கம்ப்யூட்டரை வைத்து அந்த பாதுகாப்பு அம்சத்தை உடைத்து விட முடியும். ஆனால் குவாண்டம் கம்ப்யூட்டிங் முறையில் பாதுகாப்பு அம்சத்தை ஏற்படுத்தினால் அதனை உடைப்பது கடினமாக இருக்கும்.
தொலைத் தொடர்பிலும், துல்லியமான முன்னறிவிப்பு இருக்கும் குவாண்டம் கம்ப்யூட்டிங் முறை முதற்கட்டமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குவாண்டம் கம்ப்யூட்டிங் டெக்னாலஜியை பயன்படுத்தி ஐஐடியில் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தேசிய குவாண்டம் கம்ப்யூட்டர் மிஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல வெளிநாடுகளில் இருந்தும் கருத்தரங்கிற்கு வந்துள்ளனர். இந்தியா வல்லரசு நாடாக மாறுவதற்கு குவாண்டம் கம்ப்யூட்டர் முக்கிய பங்கு வகிக்கும்.
குவாண்டம் கம்ப்யூட்டர் உருவாக்குவதில் பல நாடுகள் செயல்பட்டு வருகிறது. கம்ப்யூட்டர் ஹார்டுவேர் உருவாக்கும் பணிகள் 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும். அதன் பின்னர் தான் கம்ப்யூட்டர் வரும். தரவுகளை விரைவாக வழங்கும் வகையில் தயாரிக்கப்படும். பலருக்கும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்படும். சென்னை ஐஐடி பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : கல்வியை காவிமயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சியளிக்கிறது: விசிக எம்பி ரவிக்குமார் - vck mp ravikumar