ETV Bharat / state

கூடுதல் விலைக்கு மது விற்பனை.. மனுதாரருக்கு ரூ. 60 ஆயிரம் வழங்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவு! - TASMAC

அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்ததற்காக, மனுதாரருக்கு ரூ.60 ஆயிரம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் நிறுவன நிர்வாகத்துக்கு சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2024, 10:44 PM IST

சென்னை: சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், "கடந்த 2021ம் ஆண்டு பெரம்பூரில் உள்ள டாஸ்மாக்கில் ரூ.180க்கு விற்க வேண்டிய மதுபாட்டில் ரூ.20 கூடுதலாக ரூ.200க்கு விற்கப்பட்டது.

இதேபோல வியாசர்பாடி, கொடுங்கையூர், ஓட்டேரி, குமரன் நகர், பெரவள்ளூர், கொளத்தூர், கொசப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 10 டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைவிட மது வகை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாளரிடம் புகார் அளித்தும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என தேவராஜன் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு, " மனுதாரர் டாஸ்மாக் நிறுவனத்துக்கு எதிராக தேவையற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டாஸ்மாக் நிறுவனம் யாரையும் மது அருந்த வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. மது அருந்தாதவர்களை குடிகாரர்களாக்கி ரூ.5,000 கோடி வருமானம் ஈட்டுவதாக கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.

மதுக்கடைகளில் விலைப்பட்டியல் மற்றும் மதுவை வாங்கும்போது ரசீதுகளும் வழங்கப்படுகிறது. டாஸ்மாக் நிறுவனத்தின் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக பல கடைகளில் ரூ.10 முதல் 70 வரை அதிக விலை கொடுத்து மனுதாரரே மதுவை வாங்கியுள்ளார். மதுவை வாங்கியவர் உடனடியாக புகார் அளிக்காமல் 1 வருடத்திற்கு பின் புகார் அளித்துள்ளார்" என்று டாஸ்மாக் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : ஹூமோ டயாலிசிஸை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதா? டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு!

மனுவை விசாரித்த சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் கோபிநாத் மற்றும் உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, டாஸ்மாக்கில் மதுவை வாங்க, மதுவை அருந்துபவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால், கூடுதலாக வசூலித்த தொகையையும் சேர்த்து, கடைக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 10 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவாக ரூ.1000 வீதம் ரூ.10,000 சேர்த்து ரூ.60,330-ஐ 2 மாதங்களில் மனுதாரருக்கு டாஸ்மாக் நிறுவனம் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.