சென்னை : வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் இருக்கும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் கூறுகையில், "சென்னை மாநகராட்சியில் 3,000 கி.மீ நீளம் உள்ள மழைநீர் கால்வாய்களை தூர் வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 700 தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை 112 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியை கூடுதல் கவனம் எடுத்து பருவமழை தொடங்குவதற்கு முன் பராமரிப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
Dear #Chennaiites,#GCC has purchased 36 boats as a precautionary measure in case of heavy rainfall during the monsoon season. Below are pictures of the boats distributed in Zone 3 &14. One boat to Zone 3 and two boats to Zone 14.#ChennaiCorporation#HereToServe#NalamiguChennai pic.twitter.com/8apDlfk8eG
— Greater Chennai Corporation (@chennaicorp) October 2, 2024
இதையும் படிங்க: ஆம்பூரில் கொட்டித் தீர்த்த கனமழை... சாலையில் தத்தளித்த வாகனங்கள்!
மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் 36 படகுகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த படகுகள் மழை வெள்ளத்தில் சிக்கும் பொது மக்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக பயன்படுத்தப்பட இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் மழைநீர் அதிகம் தேங்கும் இடங்களில் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படும்.
அதீத மழைக் காலங்களில் மாநகராட்சியுடன் இணைந்து தன்னார்வலர்கள் சிறந்த முறையில் செயல்பட்டு, நிவரான காலத்தை துரித படுத்த, தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
— Greater Chennai Corporation (@chennaicorp) October 2, 2024
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தன்னார்வலர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.https://t.co/oz2knxG7h3#ChennaiCorporation pic.twitter.com/BuUp7rGHzg
மேலும், பெரும்பாலான சாலைகளில் தற்போது வரை பணிகள் முடிக்கப்படாமல் இருக்கிறது. பருவமழை தொடங்க இருப்பதால், சாலைகளை தோண்டக் கூடாது என சேவை துறைகளுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அப்படி சாலையை தோண்ட வேண்டிய சூழல் இருந்தால் அனுமதி பெற்று அப்பணியை செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழை பாதிப்புகளில் பணியாற்ற 10,000 தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்