ETV Bharat / state

“ரவுடிகளை ஒடுக்க அவர்களது மொழிகளிலேயே நடவடிக்கை எடுப்பேன்” - சென்னை புதிய காவல் ஆணையர் அருண் சபதம்! - chennai police commissioner arun - CHENNAI POLICE COMMISSIONER ARUN

New Commissioner of Police: ரவுடிசத்தை ஒடுக்க ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்பேன் என்று சென்னை மாநகர திய காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள அருண் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை புதிய காவல் ஆணையர் அருண்
சென்னை புதிய காவல் ஆணையர் அருண் (Image Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 8:51 PM IST

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ், காவலர் பயிற்சி மைய டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பேட்டி (Video Credit - ETV Bharat Tamilnadu)

இந்நிலையில், சென்னை காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் இன்று (ஜுலை 8) கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னை மாநகரத்திற்கு நான் புதிதல்ல. காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளேன். இது ஒரு கூடுதல் பொறுப்பாக அமைந்துள்ளது.

குறிப்பாக, ரவுடிசத்தை கட்டுப்படுத்துவது, சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் உள்ளிட்டவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பேன். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா என்பது புள்ளிவிவரங்கள் மூலமாக தான் தெரியவரும். குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். அதை தடுக்கும் பணிகளில் ஈடுப்பட்டு கொண்டு இருக்கிறோம்.

புள்ளிவிவரங்களில் தமிழகம் மற்றும் சென்னை காவல்துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும், அதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு வருகிறோம்" என்று அவர் கூறினார்.

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் சரியான நடவடிக்கை காவல்துறை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு, "அது குறித்து விசாரணை செய்து உண்மை இருந்தால் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பேன்" என்று காவல் ஆணையர் பதிலளித்தார்.

"தினமும் புது திட்டங்களை அறிவிப்பதால் எதுவும் நடக்க போவதில்லை. காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் குற்றங்கள் குறையும். ரவுடிசத்தை கட்டுப்படுத்த என்கவுண்டர் கிடையாது. ரவுடிகளுக்கு என்ன மொழி புரியுமோ அந்த வகையில் நடவடிக்கை இருக்கும். மேலும், எனக்கு இந்த பொறுப்பு வழங்கிய தமிழக அரசு மற்றும் முதலமைச்சருக்கு நன்றி. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பேன்” என்று சென்னை காவல் ஆணையர் அருண் கூறினார்.

இதையும் படிங்க: சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடி மாற்றம்.. புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம்! - Chennai City police Commissioner

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.