ETV Bharat / state

தீவிரவாத தடுப்புப் பிரிவு என்ற புதிய துறை அறிமுகம்: டிஐஜியாக மகேஷ் ஐபிஎஸ் நியமனம் - அமலாக்கத்துறை

Chennai Crime News: தமிழகத்தில் தீவிரவாத தடுப்புப் பிரிவு துறை அறிமுகம் செய்ததோடு அதன் முதல் டிஐஜியாக மகேஷ் ஐபிஎஸ்-யை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Chennai Crime News
சென்னை குற்றச் செய்திகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 9:38 AM IST

Updated : Feb 24, 2024, 9:48 AM IST

சென்னை: செம்பியம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தவர், செந்தில்குமார். இவர் மீது பணியில் ஒழுங்கீனம், பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட மூன்று புகார்கள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக, சென்னை புளியந்தோப்பு துணை காவல் ஆணையர் ஈஸ்வரன் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த விசாரணையில், செந்தில்குமார் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதியானதால் அவரைப் பணியிடைநீக்கம் செய்து புளியந்தோப்பு துணை காவல் ஆணையர் ஈஸ்வரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமலாக்கத்துறை சோதனை: நங்கநல்லூர், வீரமாமுனி தெருவில் வசித்து வரும் கண்ணகி என்பவர் மகளிர் சுய உதவிக்குழு ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டிற்கு நேற்று திடீரென வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பணப் பரிவர்த்தனை மற்றும் கணக்கு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதேபோல், சென்னை திருவிக நகரில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் டேனியல் செல்வக்குமார் வீட்டிலும், 6-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் வெளிநாடுகளில் முதலீடு உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில் எழும்பூர், புதுப்பேட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாத தடுப்புப் பிரிவு; 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு: தமிழ்நாடு முழுவதும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளையும், ஊடுருவுகளையும் தடுக்கும் பொருட்டு தமிழக காவல்துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு என்று புதிய பிரிவு ஒன்று துவங்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவிற்கு மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தீவிரவாத தடுப்புப் பிரிவு டிஐஜி ஆக உளவுப் பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு) பிரிவின் டிஐஜி மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்பிசிஐடி-யின் சிறப்புப் பிரிவின் எஸ்பி அருளரசனக்கு தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைமையக கண்காணிப்பாளராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பி ஆக இருக்கக்கூடிய சசி மோகனுக்கு மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மூவரும் உடனடியாக அந்தப் பணிகளை மேற்கொள்ள அமுதா ஐஏஏஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஐடி துறைக்கு மாற்றப்பட்டது ஏன்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

Last Updated : Feb 24, 2024, 9:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.