ETV Bharat / state

கல்வி நிலையங்களில் பாலியல் குற்றங்கள்; மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை! - chief secretary Muruganandam - CHIEF SECRETARY MURUGANANDAM

பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் இருக்கின்ற பகுதிகளில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழித்திட காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் முருகானந்தம்
தலைமைச் செயலாளர் முருகானந்தம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 11:00 PM IST

சென்னை: கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த ஆட்சியர்கள், கல்வி அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கல்வி நிலையங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜுவால், உயர் கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர், நேரில் கலந்துகொண்டர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் கானோளி காட்சி மூலம் ஆலோசனையில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் NCC முகாமில், பள்ளி மாணவி பாலியல் துன்புறத்தல் விவகாரம் தொடர்பாக விவாதிக்கபட்டது. மேலும், தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

புகார் குழு: தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருகின்றன.இந்நிலையில் internal complaints committee என்று அழைக்கப்படும் உள் புகார் குழுவை அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் முறையாக அமைக்க வேண்டும். புகார்களை அளிக்க அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும்.

Anti drug club: மாணவ மாணவிகள் போதை பொருளுக்கு அடிமையாகி இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க Anti drug club களை ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி கல்லூரி வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மகளிர் தங்கும் கல்லூரி விடுதிகள் போன்றவற்றில் வெளி ஆட்கள் பணிகளுக்கு உள்ளே வந்தால் அவர்களுடன் கல்லூரியை சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர் உடனிருந்து இந்த பணிகளை கண்காணிக்க வேண்டும்.

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரியை காட்டிலும் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதை தக்க வைக்கும் வகையில், பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் மற்றும் போதை பொருட்கள் இல்லாத நிலையை கல்வி நிலையங்களில் ஏற்படுத்திட வேண்டும். காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் இருக்கின்ற பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை அறவே ஒழித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து கல்லூரிகளிலும் நடக்கும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை உடனடியாக காவல்துறையிடம் கொண்டு செல்ல காவலர் ஒருவரை நியமிக்கவும் பரிசீலனை செய்து, கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் பழனியில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.