ETV Bharat / state

சித்த மருத்துவர் குடும்பத்துடன் மோதல்.. சென்னை இரட்டைக்கொலை வழக்கில் வடமாநில இளைஞர் கைது! - Chennai Double Murder Case - CHENNAI DOUBLE MURDER CASE

Chennai Double Murder Case: சென்னை ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

CHENNAI AVADI DOUBLE MURDER CASE
ஆவடி இரட்டை கொலை வழக்கு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 9:29 AM IST

Updated : Apr 30, 2024, 3:06 PM IST

சென்னை: ஆவடி அடுத்த மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் சித்தா மருத்துவர் சிவன் நாயர். இவர் வீட்டிலேயே சித்தா மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி, கணவருக்கு உதவியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் சிகிச்சை பார்ப்பதற்காக வந்த மர்ம நபர்கள், சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த முத்தாபுதுபேட்டை போலீசார், சம்பவம் நடைபெற்ற மருத்துவர் வீட்டில் சோதனை செய்தனர்.

சிக்கிய செல்போன்: அப்போது சம்பவ இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த செல்போன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்குச் சொந்தமானது என்றும், இவர் வளசரவாக்கத்தில் தங்கி ஹார்டுவேர் கடையில் வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், வளசரவாக்கம் பகுதியில் வேலைக்கு சேர்வதற்கு முன்னர், முத்தாபுதுபேட்டையில் சில வருடம் வேலை செய்து வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் சிவன் நாயர் வீடு புதுப்பித்தல் போது மகேஷ் அறிமுகமாகி உள்ளார். பின்னர், சித்த மருத்துவர் சிவன் நாயரிடம் உடல் வலிக்கு மகேஷ் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

உடல் வலிக்கு சிகிச்சை: உடல் வலிக்கு சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி 'வர்மக்கலை' மூலமாக மகேஷுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் , நாளடைவில் மகேஸின் நடவடிக்கை பிடிக்காத பிரசன்னா குமாரி, இங்கு வருவதை தவிர்க்கும்படி கூறி வந்துள்ளார்.

இதற்கிடையில், முத்தாபுதுபேட்டையில் இருந்து வளசரவாக்கத்துக்கு வேலைக்குச் சென்ற மகேஷ் சில மாதங்கள் சித்த மருத்துவரைச் சந்திக்காமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் மகேஷ், சிகிச்சைக்காக சிவன் நாயரைச் சந்தித்து உள்ளார். அப்போது மகேஷின் நடவடிக்கை குறித்து, தனது மகனிடமும் கூறி, இனி இங்கு வரக்கூடாது என எச்சரித்துள்ளார் சிவன் நாயர்.

சிகிச்சை அளிக்க மறுத்ததால் வெறிச்செயல்: சம்பவத்தன்று சிகிச்சைகாக மீண்டும் மகேஷ் வந்துள்ளார். அப்போது, மகேஷ்-க்கும், பிரசன்னா குமாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து பிரசன்னா குமாரியில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர், மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிவன் நாயரை, பின்புறத்தில் இருந்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி பேருந்து மூலம் ஆவடி சென்றுவிட்டு, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வடமாநில இளைஞர் கைது: இதன் அடிப்படையில், கொலை செய்தது மகேஷ்தான் என்பதை உறுதி செய்த போலீசார், வளசரவாக்கத்தில் பதுங்கி இருந்த மகேஷை கைது செய்து, முத்துப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவிகளுக்குத் தவறான பாதை.. நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு.. வழக்கு கடந்து வந்த பாதை!

Last Updated : Apr 30, 2024, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.