ETV Bharat / state

விமானத்தில் மதுபோதையில் ரகளை செய்த இளைஞர் கைது - Mohammad Azharuddin

Chennai Airport: குடிபோதையில் விமானத்துக்குள் ரகளை செய்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

chennai airport
சென்னை விமான நிலையம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 1:27 PM IST

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடுவானில் பறந்துகொண்டிருந்த நிலையில், குடிபோதையில் விமானத்துக்குள் ரகளை செய்து பெண் பயணிகளை அச்சுறுத்திய இளைஞரை, சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துபாயிலிருந்து “இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்” நேற்று (ஜன.27) 164 பயணிகளுடன், சென்னைக்கு வந்துள்ளது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த முகமது அசாருதீன் (25) என்ற இளைஞர், மதுபோதையில் திடீரென்று, விமானத்திற்குள் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், விமானத்தில் பயணம் செய்த சக பெண் பயணிகளையும் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், விமானத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விமானத்தில் பணியில் இருந்த விமான பணிப்பெண்கள், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட பயணி முகமது அசாருதீனை அமைதி படுத்த முயன்றனர். ஆனால், அவர் தொடர்ந்து விமானத்துக்குள் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் விமானத்திற்குள் இருந்த சக பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, விமானி இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்பொழுது, இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் போதையில் ரகளை செய்த பயணி முகமது அசாருதீனை மடக்கிப் பிடித்து, குடியுரிமை சோதனை மற்றும் சுங்கச் சோதனைகளை நடத்தி, விமான நிலைய இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், முகமது அசாருதீன் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் துபாயில் ஒரு பல்பொருள் அங்காடியில் (departmental store) வேலையில் இருந்ததாகவும், தற்போது விடுமுறையில் சொந்த ஊர் திரும்பியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், முகமது அசாருதீனை, சென்னை விமான நிலைய போலீசிடம் ஒப்படைத்தனர்.

சென்னை விமான நிலைய போலீசார் முகமது அசாருதீனை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் விமானத்தில் ரகளை செய்துள்ள சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: "நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது எனக்கு உறுதுணையாக இருப்போம் என நினைத்து இருப்பார்" - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.