சென்னை: சென்னை டி.பி சத்திரம் மதீனா பள்ளிவாசல் அருகே நேற்றைய முன்தினம் (செப்.24) தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் உத்தரவின் பெயரில் உதவி ஆணையர் ராஜ்குமார் சாமுவேல் தலைமையிலான தனிப்படை (serious crime squad) போலீசார் வேறொரு வழக்கு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த இர்ஷித் முகமது (48) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். பின் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருடைய நண்பர்களான கே.கே நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ், டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் எபினேசர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து சிலைகளை கடத்தி விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையும் படிங்க: கருணாநிதியே போயிட்டாரு; அப்புறம் எதுக்கு பேனா சிலை? ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு சிவி சண்முகம் பதிலடி!
இதையடுத்து அவர்களிடம் இருந்த 1.5அடி உயரம் உள்ள முருகன் சிலை மற்றும் 1அடி உயரமுள்ள வள்ளி மற்றும் தெய்வானை சிலை ஆகிய மூன்று சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர். பின் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளரிடம் காண்பிக்கப்பட்ட நிலையில், அந்த சிலைகள் 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த சிலை என தெரிவித்துள்ளனர்.
மேலும் அதை கடத்தி வந்தவர்கள் எந்த இடத்தில் இருந்து சிலைகளை வாங்கினார்கள்? யாரிடம் விற்பனைக்காக விலை பேசி இருக்கிறார்கள்? என்ற கோணத்தில் உதவி ஆணையர் ராஜ்குமார் சாமுவேல் தலைமையில் தொடர் விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்