ETV Bharat / state

ஓடும் மின்சார ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு.. வைரலாகும் சிசிடிவி காட்சி! - Chain Snatching in Electric train

Arakkonam railway Station: அரக்கோணம் அருகே மின்சார ரயிலில் பெண் பயணியிடம் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

செயின் பறித்த நபரை கைது செய்த போலீசார்
செயின் பறித்த நபரை கைது செய்த போலீசார் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 5:08 PM IST

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே மின்சார ரயிலில் உறங்கிக் கொண்டிருந்த பெண் பயணியிடம் செயின் பறித்த ஆட்டோ ஓட்டுநரை அரக்கோணம் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரிடமிருந்து 11 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனர்.

ரயிலில் செயின் பறித்த சிசிடிவி காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியைச் சேர்ந்தவர் அபிராமி. இவர் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, ஆவடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக நேற்று இரவு 9 மணியளவில் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். இவர் ரயிலில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், ரயில் அரக்கோணம் அருகில் சிக்னலுக்காக நின்றுள்ளது.

இதனையடுத்து, ரயில் புறப்பட்ட நேரத்தில், ரயிலில் இருந்த மர்ம நபர் அபிராமி கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பியுள்ளார். இது குறித்த காட்சிகள் ரயிலில் இருந்த சிசிடிவி கேமாராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து, அரக்கோணம் ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்துள்ளனர். இதேபோல், ஆவடியில் இருந்து அரக்கோணம் வந்த மின்சார ரயிலிலும் பார்வதி என்பவரிடம் 4 சவரன் செயின் பறிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில்களில் தொடர்ந்து பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், டிஎஸ்பி கர்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களைத் தேடி வந்துள்ளனர். இதில், அரக்கோணம் ரயில் நிலையம் 4வது பிளாட்பாரத்தில் சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், அவர் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நாகராஜ் (35) என்பதும், ரயிலில் பெண் பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 11 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து, அரக்கோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அவர் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தோழியின் சதி.. தீபக் ராஜாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கூலிப்படை.. முழு பின்னணி! - Deepak Raja Murder Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.