காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 5,476 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் கட்டுமான பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் இத்திட்டத்திற்கான ஆய்வு எல்லைகளை வழங்கிட கோரி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) கடந்த மே மாதம் 2 ஆம் தேதி அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 26 முதல் 28 வரை நடைபெற்ற அமைச்சகத்தின் 128வது கூட்டத்தில், டிட்கோ சமர்பித்திருந்த அறிக்கையை நிபுணர் மதிப்பீட்டுக் குழு (Infra) ஆய்வு செய்தது.
இந்நிலையில், பரந்தூர் பசுமை விமான நிலையம் கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ஆய்வு எல்லைகளை வழங்கி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி பசுமை விமான நிலையம் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கான பெருந்திட்ட அறிக்கை மற்றும் திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரி, தமிழக அரசு சனிக்கிழமை (செப்.7) அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம்: திட்ட அறிக்கை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! -