ETV Bharat / state

“PM அலுவலக செயலாளரை சேர்த்ததில் என்ன தவறு?” மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்!

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 3:37 PM IST

மதுரை: மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது. ஆகவே, இந்திய கடற்படை கப்பல், எல்லைக் கோட்டில் இருந்து இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இடைக்கால உத்தரவிட வேண்டும்.

மேலும், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதையும், வலைகளைப் பறித்து கைது செய்வதையும் தடுக்கும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்த வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அஞ்சலை மீதான குண்டர் சட்டம்.. காவல்துறை பதில் அளிக்க உத்தரவு - சென்னை ஐகோர்ட்!

அப்போது மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராகி, “இந்த வழக்கில் பிரதமர் அலுவலக முதன்மைச் செயலரை தேவையின்றி சேர்த்துள்ளதாகவும், அவரை வழக்கிலிருந்து நீக்குமாறு கோரிக்கை" விடுத்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், "பிரதமர் அலுவலக செயலாளர் வழக்கில் சேர்க்கப்பட்டதில் என்ன தவறு? ஏன் அவரை வழக்கிலிருந்து நீக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, மீனவர்கள் தாக்கப்படுவது பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினால் சரியாகும் என மனுதாரர் நினைக்கிறார், அதில் தவறு ஒன்றும் இல்லை" என கூறினார்.

எனவே மனுதாரர் கோரிக்கை குறித்து பிரதமர் அலுவலகச் செயலாளர், மத்திய உள்துறைச் செயலாளர், மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் தமிழக அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.