ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் தாய், தந்தையை இழந்த 28 குழந்தைகள்.. மீளாத் துயரில் தவிப்பு! - Kallakurichi liquor Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 3:35 PM IST

Kallakurichi liquor Issue: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவத்தில் 28 குழந்தைகள் தாய் - தந்தையை இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் சமூக நலத்துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 18 வயதிற்கு உட்பட்ட 28 குழந்தைகளின் விருப்பத்தின் பேரில் அவர்கள் கல்விக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தியதால் அந்த ஊர் மட்டும் இல்லாமல் அருகில் உள்ள கோட்டைமேடு, சிறுவங்கூர், வன்னஞ்சூர், சேஷசமுத்திரம், இளந்தை, மாதவச்சேரி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மது அருந்தியவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 7 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 58 பேர் இறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசும்போது, “பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும். பெற்றோர்கள் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத்தொகையாக வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும். பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களது விருப்பத்தின் பேரில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மூலம் மாவட்ட அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி உள்ளனர். அதன்படி 23ஆம் தேதி வரையில், கள்ளக்குறிச்சியில் 18 வயதிற்குட்பட்ட 28 குழந்தைகள் இந்த சம்பவத்தில் தங்களின் பெற்றோரை இழந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். இவர்களில் தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்த 4 குழந்தைகளும், தாய் அல்லது தந்தை ஆகியோரில் ஒருவரை இழந்த 24 குழந்தைகளும் அடங்குவர்.

இந்த மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தனியார் பள்ளியில் சேர்க்கவும், அவர்களின் கல்வி இடைநிற்காமல் தொடர்ந்து படிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "எங்கள் நிலை இனி யாருக்கும் வரக்கூடாது.." கண்ணீர்க் கடலில் கருணாபுரம் குழந்தைகள்! - Kallakurichi Illicit Liquor

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.