ETV Bharat / state

கள்ளச்சாராய வியாபாரிகளை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல் - kallakurichi Celebrities reactions

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 6:13 PM IST

தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் விஷால் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து தங்களது எக்ஸ் (X) வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

டிகர் கமல், இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் விஷால்
நடிகர் கமல், இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் விஷால் (Image Credits : Kamal Hassan, Pa.Ranjith, Vishal X pages)

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏர்படுத்தியுள்ள நிலையில் இதுவரை 38 பேர் இதற்கு பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோரின் அலட்சியமே இந்த கொடுங்துயரத்திற்கு காரணம் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நடிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கமல்ஹாசன்: இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது எனவும், தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

பா. ரஞ்சித் டுவீட்: தனது எக்ஸ் (X) வலைதளப்பக்கத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், 'கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள அவர், தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணம் என விமர்சித்துள்ளார்.

மேலும், இதற்கு தனது வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதாக பதிவிட்டுள்ள பா.ரஞ்சித், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அது மட்டும் இன்றி, இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசி மேற்கொள்ள வேண்டும்' எனவும் பா.ரஞ்சித் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகர் விஷால் டுவீட்: நடிகர் விஷால், தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும், இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: தெருவுக்கு ஒரு சடலம் : கள்ளச்சாராயத்தால் சீரழிந்த கள்ளக்குறிச்சி! நடந்தது என்ன? - kallakurichi Illegal Liquor Death

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.