ETV Bharat / state

ரவுடியை ஓட ஓட வெட்டிக்கொன்ற ஆட்டோ ஓட்டுநர்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்! - CHENNAI ROWDY MURDER - CHENNAI ROWDY MURDER

CHENNAI ROWDY MURDER: வட சென்னை திருவொற்றியூரில் மாமூல் கேட்டு தொல்லை கொடுத்த ரவுடியை, ஆட்டோ ஓட்டுநர் தனது கூட்டாளிகளோடு சேர்ந்து சாலையில் வெறித்தனமாக வெட்டிப் படுகொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ரவுடியை தாக்கும் கும்பலின் புகைப்படம்
ரவுடியை தாக்கும் கும்பலின் புகைப்படம் (Credit -ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 7:51 PM IST

சென்னை: வடசென்னை திருவொற்றியூர் அஞ்சுகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராசையா. பிரபல ரவுடியான இவர் மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருபவர் முரளி.

ரவுடியை தாக்கும் சிசிடிவி காட்சிகள் (Credit -ETVBharat TamilNadu)

முரளி அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், முரளியிடம் மாமுல் கேட்டு ராசையா தொல்லை கொடுத்ததாகவும், தர மறுத்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த முரளி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அஜாக்ஸ் பகுதியில் சுற்றித்திரிந்த ரவுடி ராசையாவை சாலையிலேயே கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இது தொடர்பாக முரளி மற்றும் அவரது கூட்டாளிகள் என நான்கு பேரை திருவொற்றியூர் போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பிய நிலையில், தற்போது ராசையாவை சாலையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் மழைநீர் வடிகால் பணி 90 சதவீதம் நிறைவு - ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்! - Chennai Rainwater Drainage

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.