ETV Bharat / state

கோவை அருகே சாலையில் நடந்துச் சென்ற முதியவரை தாக்கிய யானை.. பதைபதைக்கும் காட்சி! - Elephant attack on old man - ELEPHANT ATTACK ON OLD MAN

Elephant attack on old man: கோயம்புத்தூர் மருதமலை பகுதியில் சாலையில் நடந்துச் சென்ற முதியவரை ஒற்றை காட்டு யானை தாக்கிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதியவரை தாக்கிய யானை
முதியவரை தாக்கிய யானை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 3:00 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தற்போது 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் மருதமலை, ஐ.ஓ.பி காலனி, பாரதியார் பல்கலைக்கழக வளாக பகுதிகளில் சுற்றி வருகின்றன.

மேலும், சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் வனப்பகுதியை ஒட்டி திறந்த வெளி குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளதால், இரவு நேரங்களில் அங்கு வரும் யானைகள் குப்பையில் உணவு தேடுவது வழக்கம். அந்த வகையில், சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் மருதமலை வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, லெப்ரஸி காலனி வழியாக வந்துள்ளது.

முதியவரை தாக்கிய யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது அந்த பகுதியை சார்ந்த சிவசுப்பிரமணியம் என்ற முதியவர் சாலையில் நடந்து வந்த போது, திடீரென எதிரே யானை வந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முதியவர், பயத்தில் ஓட முயன்றுள்ளார். அவரை தடுத்த யானை, தள்ளிவிட்டும், காலால் உதைத்து விட்டும் சென்றது.

இந்த காட்சிகள் அப்பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. யானை தாக்கியதில் காயமுற்ற முதியவர், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "யானை வருவது குறித்து பலமுறை வனத்துறையிடம் தெரிவித்தும் அவர்கள், அதனை கண்காணிக்க தவறிவிடுகின்றனர். இப்பகுதியில் வனவிலங்குகள் அதிகமாக நடமாடுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருவகிறோம். தமிழக அரசும், வனத்துறையும் பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: முதுமலை சாலையில் உலா வந்த புலி; மரண பீதியில் சுற்றுலா பயணிகள்! - Tiger Roaming

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.