ETV Bharat / state

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - Chennai Car Accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னை, பூந்தமல்லி அருகே மின்சார வயர்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், காரில் பயணித்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்
பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பவன். இவரது நண்பர் வெளிநாட்டில் இருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விமான மூலம் சென்னைக்கு வந்த நிலையில், அவரை அழைத்துச் செல்வதற்காக பவன் அவரது நண்பர்களுடன் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

பின்னர் வெளிநாட்டிலிருந்து வந்த தனது நண்பரை காரில் ஏற்றிக் கொண்டு ஆந்திரா நோக்கிச் சென்றுள்ளார். அந்த காரில் பவன் உட்பட 4 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் டிரங்க் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் ஓரத்தில் 400 கிலோ வாட் திறன் கொண்ட மின்சார வயர்களை பதிப்பதற்காகத் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனைக் கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து, பள்ளத்தில் கவிழ்ந்த காரில் இருந்தவர்களை மீட்டுள்ளனர். இதில் எந்தவித காயமும் இன்றி நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரை கிரேன் உதவியுடன் மீட்டனர்.

இதையும் படிங்க: கும்பகோணம் - சீர்காழி நான்கு வழிச்சாலையால் என்ன பயன்? எப்போது பணி தொடங்கும்?

இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோரத்தில் மின்சார வயர்கள் பதிக்கத் தோண்டப்பட்ட பள்ளத்திற்காக வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் முறையாக இல்லாதது தான் இந்த விபத்திற்குக் காரணம் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சமீபத்தில் தான இந்த பகுதியில் மொட்ரோ ரயில் கட்டுமானம் முடிந்துள்ளது.

இருப்பினும் அதன் அருகிலேயே மின்சார வயர் பதிப்பதற்குப் பள்ளம் தோண்டி இருப்பதாலும், சாலை மிகக் குறுகலாக இருப்பதாலும் இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.