ETV Bharat / state

தென்காசியில் தனியார் பேருந்து மீது டிப்பர் லாரிய மோதி விபத்து.. சிசிடிவி காட்சி வெளியீடு! - cctv footage

CCTV FOOTAGE: தென்காசியில் டிப்பர் லாரி மீது தனியார் பேருந்து மோதிய பயங்கர விபத்தில் 4 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 16, 2024, 3:05 PM IST

தென்காசி: தென்காசியில் இருந்து வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் ஏராளமான கனிம வள லாரிகள் சென்று வருகிறது. இந்தநிலையில் கடந்த ஜூன் 13ஆம் தேதி செங்கோட்டை பகுதியில் இருந்து சுரண்டை பகுதிக்கு கனிம வளம் ஏற்றிச் செல்வதற்காக வந்த டிப்பர் லாரி தென்காசி - மதுரை நெடுஞ்சாலையான ஈனா விளக்கு பகுதியில் வந்தது.

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதேநேரம், ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஈனா விளக்கு ரவுண்டானா பகுதியைக் கடந்து செல்ல முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கனிமவள லாரி, பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 வயது சிறுவன் மற்றும் இரண்டு பெண்கள் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி போலீசார், காயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு அவர்களை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டுநர் முத்துராஜ் தினேஷ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கிய சிறுவனை மீட்ட தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி, தனது மடியில் சிறுவனை வைத்துக் கொண்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் வாகனத்தில் கொண்டு சென்று அனுமதித்த வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகிறது.

தற்பொழுது விபத்து நடந்த பகுதியில் தடுப்பு வைக்கப்பட்டு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு சாலைகளிலும் காவல்துறையினர் 24 மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "இன்று இல்லாவிட்டால் நாளை வெற்றி பெறுவோம்" வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.