திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தேனி செல்வதற்காக அரசுப் பேருந்தை சுப்ரமணி என்ற ஓட்டுநர் இயக்க முயன்று, வெளியே வந்த போது பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, பேருந்தானது எதிரே இருந்த இனிப்பு கடைக்குள் புகுந்தது. இதனால் கடைக்குள் இருந்த பெண்மணிக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் அப்பெண்மணி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கடையிலிருந்த கண்ணாடி பொருட்கள் மற்றும் இனிப்புகள் அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில் அரசு பேருந்தைப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, பழனியில் கடந்த வாரம் அரசு பேருந்து ஒன்றின் சக்கரம் கழன்று ஓடியது. இதனால் பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்.
இதையும் படிங்க: நீட் விலக்கு குறித்து இனி மத்தியில் பேச்சுகள் வரும்! - மா.சுப்ரமணியன் கூறுவது என்ன? - M SUBRAMANIYAN ABOUT AIIMS BUILDING