ETV Bharat / state

லோடுமேனை மிரட்டி மதுபான பெட்டியை பறித்துச் சென்ற மர்ம கும்பல்.. வைரலாகும் வீடியோ! - Gang snatched the liquor box - GANG SNATCHED THE LIQUOR BOX

Gang snatched the liquor box: லாரியில் இருந்து மதுபானக் கடைக்கு மதுபானப் பெட்டிகளை இறக்கி கொண்டிருக்கும் போது, மர்ம நபர்கள் சிலர் மதுபான பெட்டிகளை லோடு இறக்கும் ஊழியர்களை மிரட்டி பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபான பெட்டியை பறித்து சென்ற கும்பல்
மதுபான பெட்டியை பறித்துச் சென்ற கும்பல் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 3:16 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் அவ்வப்போது பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு அரசு மதுபானக் கடைகளில் ஊழியர்களை பட்டப்பகலில் ரவுடிகள் மிரட்டி மதுபானங்களை எடுத்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தாலும், முறையாக வழக்குப்பதிவு செய்யாமல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமலும் இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுபான பெட்டியை பறித்துச் சென்ற கும்பல் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதன் காரணமாக, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், டாஸ்மாக் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஜூன் 24ஆம் தேதி தூத்துக்குடி சிவந்தா குளம் அரசு மதுபானக் கடைக்கு லாரி மூலம் மதுபானப் பெட்டிகள் கொண்டுவரப்பட்ட நிலையில், லோடுமேன்கள் கடைக்குள் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே வந்த இரண்டு நபர்கள், லோடுமேனை மிரட்டி அவர் கையில் வைத்திருந்த ஒரு மதுபானப் பெட்டியை அப்படியே பறித்துச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்கள் மதுபானப் பெட்டியை திருடி சென்ற நபர்களைப் பிடிக்க முயன்ற போது இருசக்கர வாகனத்தில் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இந்த நிலையில், தற்போது மர்ம கும்பல் லோடுமேனை மிரட்டி மதுபானப் பெட்டியை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் இதுபோன்று அரசு மதுபானக் கடையில் நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள் மற்றும் ரவுடிகள் அட்டகாசத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆணவப்படுகொலை விவகாரம்; உரிய சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு விசிக எம்எல்ஏ கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.