ETV Bharat / state

பெண்களின் உள்ளாடைகளை குறி வைத்து திருடும் நபர்.. நெல்லையில் தூக்கமிழந்த இல்லத்தரசிகள்..! - NELLAI WOMEN UNDERWEAR THIEF

நெல்லையில் காயப்போட்டுள்ள பெண்களின் உள்ளாடைகளை திருடி கொண்டு செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

உள்ளாடையை திருடும் நபரின் சிசிடிவி காட்சி
உள்ளாடையை திருடும் நபரின் சிசிடிவி காட்சி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

திருநெல்வேலி: அல்வாக்குப் பெயர் பெற்ற நெல்லை மாவட்டத்தில் அரிவாள் வன்முறைகள் ஒரு பக்கம் அச்சுறுத்தலை கொடுத்தாலும், மனதளவில் பாதிக்கப்பட்ட சில சைக்கோ மனிதர்களின் செயல்பாடுகளால் சாமானிய மக்களின் மன அமைதி வெகுவாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, நெல்லை மாநகரில் அதிகாலை நேரத்தில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் திருடி ரசித்து எடுத்துச் செல்லும் சைக்கோ திருடனால் பெண்கள் உறக்கத்தை தொலைத்துள்ளனர்.

நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காயப்போட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகள் சமீப நாட்களாக காணாமல் போவதாக புகார் எழுந்துள்ளது.

உள்ளாடை மட்டும் காணாமல் போவதை உணர்ந்த மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்ட நிலையில், பெரும்பாலான வீடுகளில் காணாமல் போனது தெரிந்ததும் சில வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். குறிப்பிட்ட சிசிடிவி கேமராவில் அந்த நபர் உள்ளாடையை திருடி செல்வது பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: கோவில்பட்டி சிறுவன் மரண வழக்கு; ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை!

அந்த சிசிடிவி காட்சியில், அதிகாலை நேரத்தில் 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் கொடியில் காயபோட்டிருக்கும் உள்ளாடைகளை எடுத்து அதனை கையில் வைத்து ரசித்து பார்த்து பின்னர் தனது பாக்கெட்டுக்குள் வைத்து எடுத்து செல்கிறார். இதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக குடும்பத்தாருடன் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக எடுத்து கொண்டு நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர்.

அதிகாலை நேரத்தில் மக்கள் அசந்து உறங்குவது வழக்கம் இதனை தனது சாதமாக்கிக் கொண்டு வீட்டில் வெளியே காய போட்டிருக்கும் உள்ளாடைகளை ரசித்து திருடி எடுத்துச் செல்லும் நபரை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''அந்த நபர் சற்று மனநிலை சரியில்லாதவர் போல் தெரிகிறது. ஆனாலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று கூறினர்.

நெல்லையில் ஆள் இல்லாத நேரம் பார்த்து பெண்களின் உள்ளாடையை திருடி செல்லும் நபரின் செயல் அப்பகுதி பெண்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், உள்ளாடைகள் திருடி செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி திடுக்கிட வைத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.