ETV Bharat / state

சென்னையில் தொடரும் தெருநாய்கள் பிரச்சனை.. சிறுமியை துரத்திய சிசிடிவி காட்சி! - CCTV footage of dog biting child

stray dogs attacking child video: சாலையில் நடந்துச் சென்ற சிறுமியை நான்கு தெரு நாய்கள் துரத்தி சென்று சுற்றுவளைத்து கடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை தெரு நாய்கள் துரத்திய புகைப்படம்
சிறுமியை தெரு நாய்கள் துரத்திய புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 4:44 PM IST

தெரு நாய்கள் சிறுமியை துரத்தும் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சாலையில் நடந்துச் சென்ற சிறுமியை தெரு நாய்கள் துரத்திச் சென்று கடித்ததில் சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுமியை நாய்கள் துரத்தும் சிசிடிவி வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

பெரம்பூர் கௌதமபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் அமித். இவரது மகள் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (மே 18) வெளியே சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது நான்கு தெரு நாய்கள் சிறுமியை கடிப்பதற்காக துரத்தியுள்ளது. இதனால் பதற்றமடைந்த சிறுமி நாய்களிடம் இருந்து தப்ப அங்கிருந்த வீட்டை நோக்கி ஓடியுள்ளார்.

இருப்பினும் சிறுமியை சுற்றி வளைத்த நாய்கள் சிறுமியை கடிக்க வந்துள்ளன. இதனால் சிறுமி பயத்தில் கத்தியுள்ளார், சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட தாய் தனது மகளை தெரு நாய்கள் துரத்துவதை கண்டு, வேகமாக ஓடி வந்து நாய்களை துரத்தியுள்ளார். மேலும், சத்தம் கேட்டு வந்த அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வந்த நபரும் நாயை துரத்தியுள்ளார். பின்னர் சிறுமியை பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது, ஒரு நாய் கடித்ததில் அதன் பல் தடம் சிறுமியின் உடலில் பதிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற பெற்றோர், அங்கு நாய் கடிக்கான தடுப்பூசி போட்டு வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் சிறுமியை நான்கு தெரு நாய்கள் சேர்ந்து கடிக்க துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே சென்னை மாநகரில் ஒரு பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை ராட்வீலர் (rottweiler) வளர்ப்பு நாய்கள் கடித்துக்குதறியது. இதனை கண்ட அவரது தாய் குழந்தையை காப்பாற்ற வந்த போது அவரையும் காட்டு விலங்கு போல இருந்த அந்த நாய்கள் கடித்துள்ளது. நாய்களின் தாக்குதலால் சிறுமி தலையின் சதைப் பகுதி பெரிய அளவில் பிய்ந்து தொங்கியுள்ளது.

ஆனால் நாய்களின் உரிமையாளர் அவற்றை தடுக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதையடுத்து பெரும் போராட்டத்திற்குப் பின் அருகில் இருந்த பொதுமக்கள் நாயை துரத்திவிட்டு சிறுமி மற்றும் தாயை மீட்டு இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் அனுமதித்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடரும் நாய் கடிக்கும் சம்பவங்களின் எதிரொலியாக 23 வகையான நாய்களை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும் மற்றும் தடை செய்யப்பட்ட நாய்களை வைத்திருப்பவர்கள் அவைகளுக்குக் கருத்தடை செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர்! - நீதிபதி பிறப்பித்த உத்தரவு என்ன? - SAVUKKU SHANKAR CASE LATEST UPDATE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.