நீலகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக சம்பவம் நடைபெற்ற பங்களாவில் சிபிசிஐடி எஸ்.பி தலைமையிலான 15 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வு குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர் தரப்பு வழக்கறிஞர் மூலம், சம்பவம் நடைபெற்ற இடத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன எனவும், இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை மீண்டும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது.
இவ்வழக்கின் கடந்த விசாரணையின்போது சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து, சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 7) சிபிசிஐடி எஸ்.பி தலைமையிலான சிறப்புக் குழு மற்றும் தடயவியல் நிபுணர்கள், சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றபோதும், தற்போதும் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது என முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை நடைபெறும் விசாரணையின்போது, இந்த ஆய்வு குறித்து விளக்கம் அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கம்; சமுதாய வானொலி துவக்க விழா ரத்து? என்ன சொல்கிறார் துணைவேந்தர்?