ETV Bharat / state

"அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது" - அன்புமணி ராமதாஸ் - அயோத்தி ராமர் கோயில்

Anbumani ramadoss: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகமாக இருந்தாலும், திமுக இளைஞரணி மாநாடாக இருந்தாலும், பொதுமக்களுக்கு எந்த பாதிப்புகளும் இல்லாத வகையில் நடைபெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ்  செய்தியாளர்களை சந்திப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 4:03 PM IST

தருமபுரி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகத் தருமபுரிக்கு இன்று வருகை தந்திருந்தார். தமிழகத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு எடுப்பதால் தமிழகத்திற்குத் தான் வளர்ச்சி எனவும், நாளை மறுநாள் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பின்னர்,நல்லானூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “அயோத்தியில் நாளை நடைபெறவிருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதாலும் இதர வேலைகள் இருப்பதால், கலந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஒருநாளில் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லவுள்ளேன்.

திமுக இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. அது அவர்களுடைய கட்சியின் நிகழ்ச்சி. ஆனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பு இல்லாமல் நடத்த வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்று சொல்பவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். ஏன் கணக்கெடுப்பு நடத்தத் தயங்குகிறார்கள். பீகாரில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தி, 94 இலட்சம் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அரசு ரூ.2 லட்சம் உதவி செய்வதாக அறிவித்துள்ளார்கள்.

அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ஒரு சில கட்சித் தலைவர்கள் சாதி வாரிக் கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு இந்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த புரிதல் இல்லை. நாளை மறுநாள் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மக்களுடைய வளர்ச்சி பிரச்சனை. இதற்கு உரிய முக்கியத்துவத்தை அரசு அளிக்க வேண்டும். நாட்டில் ஆறு மாநிலங்களில் இக்கணக்கெடுப்பு நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தான் இக்கணக்கெடுப்பு முதலில் நடத்தியிருக்க வேண்டும். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகமாக இருந்தாலும், திமுக இளைஞரணி மாநாடாக இருந்தாலும், பொதுமக்களுக்கு எந்த பாதிப்புகளும் இல்லாத வகையில் நடைபெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்தும், பாஜக முயற்சி நீண்ட காலம் நீடிக்காது" - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.